வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம், பா.ஜ., - தி.மு.க., மோதலாக உருவெடுத்துள்ளது.
மதம் மாறுமாறு, விடுதி வார்டன் கட்டாயப்படுத்தியதாக, மாணவி பேசிய வீடியோவை பகிர்ந்த, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தொடர் போராட்டங்களை நடத்தினார்.இந்த விவகாரத்தை, பா.ஜ., கையில் எடுத்திருப்பதால், தேசிய அளவிலான பிரச்னையாக மாறியுள்ளது.

தொடக்கத்தில் மாணவி தற்கொலை குறித்து, பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவிடம், அண்ணாமலை ஆலோசித்தபோது, மாநில அளவில் போராட்டங்களை நடத்துமாறு கூறியிருக்கிறார். ஆனால், இந்த விவகாரம் குறித்து, மத்திய உள்துறைக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பிய அறிக்கையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சிறுபான்மை நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், குறிப்பாக மதமாற்ற நடவடிக்கைகள் வேகம் எடுத்திருப்பதாக கூறியிருக்கிறார்.
டில்லியில் இருந்த பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசனிடம், இது தொடர்பாக ஜெ.பி.நட்டா கேட்டுள்ளார். இந்த விவகாரத்தை திசை திருப்ப, தி.மு.க., அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, வானதியும் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே, தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை குறித்து நேரில் விசாரித்து அறிக்கை அளிக்க, சந்தியா ராய் எம்.பி., விஜயசாந்தி, சித்ரா தாய்வாக், கீதா விவேகானந்தா ஆகிய நான்கு பேர் குழுவை, நட்டா அமைத்துள்ளார் என்கின்றனர் பா.ஜ.,வினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE