மதுரையில் மகனை உயிருடன் எரித்து கொன்ற பெற்றோர் கைது: காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமிரா: இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜன 29, 2022 | Added : ஜன 29, 2022 | கருத்துகள் (2)
Advertisement
தமிழக நிகழ்வுகள்பாராலிம்பிக் மாரியப்பன் தம்பி போலீசில் தஞ்சம்ஓமலுார் : சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 43, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு: கடந்த 27ல், என் மகள் பவித்ரா, 20, வீட்டில் இருந்து மாயமானார்.விசாரித்ததில், பாராலிம்பிக் மாரியப்பனின் தம்பியான, பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கோபி, 24, கடத்திச்சென்றது
தமிழக நிகழ்வுகள்
பாராலிம்பிக் மாரியப்பன் தம்பி போலீசில் தஞ்சம்


ஓமலுார் : சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 43, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு: கடந்த 27ல், என் மகள் பவித்ரா, 20, வீட்டில் இருந்து மாயமானார்.

விசாரித்ததில், பாராலிம்பிக் மாரியப்பனின் தம்பியான, பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கோபி, 24, கடத்திச்சென்றது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கோபி -- பவித்ரா திருமணம் செய்து கொண்டு ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருதரப்பிலும் பேச்சு நடத்தி வருகின்றனர்.கோஷ்டி மோதல்: 18 பேர் மீது வழக்கு


ஆண்டிபட்டி--தேனி முல்லை நகரை சேர்ந்தவர் பாலசுந்தர்ராஜ் 49, இவருக்கும் பள்ளப்பட்டியை சேர்ந்த பெருமாள்சாமி 62,க்கும் நிலப்பிரச்னை உள்ளது. நேற்று முன்தினம் இரு தரப்பினருக்கும் அம்மச்சியாபுரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் இரு தரப்பினரும் உருட்டுக்கட்டையால் தாக்கி கொண்டனர். பாலசுந்தரராஜ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இரு தரப்பிலும் காயமடைந்த பாலசுந்தரராஜ், சவுந்தர்ராஜ், ராஜேஷ் கண்ணன், பெருமாள்சாமி, ஈஸ்வரன், சுப்புலட்சுமி ஆகியோர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலசுந்தரராஜ் புகாரில் பெருமாள்சாமி, ஈஸ்வரன் உட்பட 8 பேர் மீதும், பெருமாள்சாமி புகாரில் பாலசுந்தரராஜ், செல்வி, சவுந்தரராஜ் உட்பட 10 பேர் மீது க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்பசுவை கொன்ற புலி :10 கேமரா கண்காணிப்பு


கூடலுார்:முதுமலை மசினகுடி அருகே, பசுமாட்டை தாக்கி கொன்ற புலி குறித்து வனத்துறையினர், 10 இடங்களில் தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி மாவனல்லா குடியிருப்பு பகுதியில், நேற்று முன்தினம் இரவு வந்த புலி, அப்பாஸ் என்பவரின் பசு மாட்டை தாக்கி கொன்றது.மக்கள் கூறுகையில்,'கூடலுார் மற்றும் மசினகுடியில் மூன்று மாதங்களுக்கு முன், 16க்கும் மேற்பட்டமாடுகள், நான்கு பேரை கொன்ற, 'டி-23' புலியை, 21 நாட்கள் தேடுதலுக்கு பின், வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தற்போது, இப்பகுதியில், மீண்டும் ஒரு புலி, பசுமாட்டை கொன்றுள்ளது. தொடர்ந்து கால்நடைகளை தாக்கும் அபாயம் உள்ளது.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'புலியின் நடமாட்டத்தை அறிய, 10 இடங்களில் கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் இரவில் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.தொழிற் சாலையில் கலப்படம்: தேயிலை துாள் அறைக்கு 'சீல்'கோத்தகிரி:கோத்தகிரியில் தனியார் தேயிலை தொழிற்சாலையில், 12 மூட்டை கலப்பட தேயிலை துாள் கண்டுபிடிக்கப்பட்டு, அறைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.கோத்தகிரி கேர்கம்பை பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் தேயிலை துாளில் கலப்படம் செய்வதாக, குன்னுார் தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, தேயிலை வாரிய கள அலுவலர் பாரதிராஜா தலைமையில் வாரிய அதிகாரிகள், தாசில்தார் காயத்ரி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்ளிட்டோர், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தொழிற்சாலை வளாகத்தில், ஒரு அறையில், தலா, 450 கிலோ எடையுள்ள, 12 மூட்டைகளில் கலப்பட தேயிலை துாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கலப்பட துாள் மாதிரியை சேகரித்த அதிகாரிகள், குறிப்பிட்ட அறிக்கைக்கு 'சீல்' வைத்தனர்.தேயிலை வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'கலப்பட தேயிலை ஆய்வுக்கு அனுப்பப்படும். ஆய்வு முடிவு வந்தப்பின்பு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.மதுரையில் மகனை உயிருடன் எரித்து கொன்ற பெற்றோர் கைது: காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமிரா
latest tamil news


மதுரை:மதுரையில் குடிபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் அடித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்தனர். மகன் உடலை சைக்கிளில் கொண்டு சென்ற கண்காணிப்பு கேமிரா பதிவு மூலம் சம்பவம் தெரிய வந்தது.
ஆரப்பாளையம் அருகே வைகையாற்றுக்குள் பாதி எரிந்த நிலையில் இளைஞர் உடல் கிடந்தது. கரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில் இறந்தது ஆரப்பாளையத்தை சேர்ந்த மணிமாறன் 45, என தெரிய வந்தது. அப்பகுதி கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்த போது மணிமாறனின் பெற்றோர் முருகேசன் 75- கிருஷ்ணவேணி 65 ஒரு உடலை சாக்கில் வைத்து கட்டி ரத்தம் சொட்ட சொட்ட சைக்கிள் பின்புறத்தில் வைத்து துாக்கி சென்றது தெரிந்தது.
போலீசார் கூறியதாவது: மணிமாறனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்தார். தினமும் குடித்து விட்டு பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த அவர் பெற்றோருடன் வாக்குவாதம் செய்தார். ஆத்திரத்தில் விறகு கட்டையால் முருகேசன் அடித்த தில் மணிமாறன் மயங்கி விழுந் தார். பின் அவர் மனைவியுடன் மகன் உடலை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு
காமராஜர் மேம்பாலம் அருகே வைகை ஆற்றுக்குள் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. கணவனும், மனைவியும் சைக்கிளில் உடலை கொண்டு சென்றது தொடர்பாக அப்பகுதி கண்காணிப்பு கேமிரா பதிவு ஒன்று கிடைத்துள்ளது என்றனர்.ரயில்வே அதிகாரியை கார் மோதி கொலை செய்த இருவர் கைதுதூத்துக்குடி:துாத்துக்குடி அருகே பிரச்னையில் ரயில்வே அதிகாரி செந்தாமரைக்கண்ணன் 56, டூவீலர் மீது கார் மோதி அவரை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


latest tamil news


திருநெல்வேலி கே.டி.சி., நகரை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பாளராக பணி செய்தார்.ஜன.16 இரவில் இவர் அங்கிருந்து திருநெல்வேலி நோக்கி டூவீலரில் வந்தபோது செய்துங்கநல்லுார் அருகே கார் மோதி பலியானார். மகன் பிரதீப் புகாரில் செய்துங்கநல்லூர் போலீசார் அதை விபத்து என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
துாத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்ட போது, 5 பேர் கும்பல் அவரை காரை மோதி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து எஸ்.பி., கூறுகையில், ''ரயில்வே அதிகாரி செந்தாமரைகண்ணனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத். அதே ஊரைச் சேர்ந்த சாம்ராட் என்பவருக்கும் செந்தாமரைக் கண்ணனுக்கும் நிலத்தகராறு இருந்தது.
சாம்ராட் ஜன.4ல் தனது நண்பர்கள் 5 பேருடன் கோவா சுற்றுலா சென்றிருந்தார். அங்கு ரயில் விபத்தில் இறந்தார். அவரது இறப்பு குறித்து தனது முகநூல் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்ட செந்தாமரைக்கண்ணன் 'இறைவனுடைய தண்டனை' என குறிப்பிட்டிருந்தார். இதனால் சாம்ராட் நண்பர்கள் ஆத்திரம் கொண்டனர். இதையடுத்து வல்லநாடு மகேஷ் 33, கலியாவூர் சுடலைமணி 29, மூளிக்குளம் ஜெகன், பக்கப்பட்டி கந்தகுமார், மார்த்தாண்டம் ஆகியோர் சேர்ந்து காரைக் கொண்டு செந்தாமரைக்கண்ணன் டூவீலரில் மோதி அவரை கொலை செய்துள்ளனர். இவர்களில் மகேஷ், சுடலைமணி கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகிறோம்,'' என்றார்தரமற்ற கால்வாய் பணி :தடுத்து நிறுத்திய மக்கள்


latest tamil news


திருப்பூர்:தரமற்ற முறையில் கான்கிரீட் கலவை கொண்டு கால்வாய் கட்டும் பணி நடந்தது. ஆவேசமடைந்த மக்கள் பணியைத் தடுத்தனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 57 வது வார்டு பலவஞ்சிபாளையம், திருக்குமரன் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள குறுக்கு வீதிகளில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக ரோட்டோரம் குழி தோண்டி, கால்வாய் கட்டும் வகையில் கான்கிரீட் கலவை ஊற்றி பணி நடந்து வருகிறது.இந்த கால்வாய் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை தரமாக இல்லை; மோசமாக உள்ளது என அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.அப்பகுதியினர் கூறியதாவது:கான்கிரீட் கலவை மோசமாக உள்ளது. கலவை ஈரம் உலரும் முன்பே அதில் உள்ள ஜல்லிக் கற்கள் பெயர்ந்து தனியாக போய் விட்டது. பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை.

மேலும், மாநகராட்சி பொறியியல் பிரிவினரிடமும் இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று (நேற்று) மீண்டும் கான்கிரீட் கலவையுடன் வந்த வாகனத்தை திரும்ப அனுப்பி விட்டோம்.தரமற்ற முறையில் பணி செய்வதற்கு அதை செய்யாமலே விட்டு விடலாம். அதிகாரிகள் நேரில் வந்து பார்வை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை இந்த பணி தொடரக் கூடாது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.தரமற்ற முறையில் பணி செய்வதற்குஅதை செய்யாமலே விட்டு விடலாம்.அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அது வரை இந்த பணி தொடரக் கூடாது.ஸ்ரீமுஷ்ணத்தில் செயின் பறிப்பு தாய், மகனை தாக்கி அட்டூழியம்


latest tamil newsஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் அருகே நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து தாய், மகனை இரும்பு கம்பியால் தாக்கி 4சவரன் செயினை பறித்துச் சென்ற இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரேமா, 54; இவரது கணவர் விருத்தகிரி ஆறு மாதங்களுக்கு முன் இறந்தார். இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கொளஞ்சிமணி சென்னையில் பணிபுரிகிறார். இரண்டாவது மகன் சக்திவேல், 24; பிரேமாவுடன் உள்ளார்.
பிரேமா வீட்டின் முன் பெட்டிக்கடை வைத்துள்ளார். இருவரும் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி துாங்கினர்.இரவு 1:00 மணிக்கு மர்ம நபர்கள் இருவர் கடையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். சத்தம் கேட்டு வந்த பிரேமாவிடம், 4 சவரன் செயினை பறித்தனர்.அவர் செயினை விடாமல் பிடித்ததால், இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கினர். அப்போது ஓடிவந்த சக்திவேல் தலையிலும் கம்பியால் அந்த நபர்கள் பலமாக தாக்கினர். பின், பிரேமாவின் 4 சவரன் செயினை பறித்து தப்பினர். மர்ம நபர்கள் குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.வைரம் வாங்கித் தருவதாக மோசடி மூவரை கடத்திய 10 பேர் கைது


அமைந்தகரை: தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அக்கிம், 60. இவரது மகன் அப்துல் ஜாபர், 29; பழ வியாபாரம் செய்கிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன், வியாபார ரீதியாக, கடையில் வேலை செய்யும் தவ்பீக் ராஜா, 27, என்பவருடன் சென்னை வந்து, அமைந்தகரையில் விடுதியில் தங்கியுள்ளார்.


latest tamil newsஇந்நிலையில், கடந்த 21ம் தேதி, அக்கிமை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், 'உங்கள் மகன் எங்களை மோசடி செய்துவிட்டார். 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் விடுவோம்' என மிரட்டியுள்ளனர். இதேபோல், தவ்பீக் ராஜாவின் மனைவியையும் மிரட்டியுள்ளனர்.சென்னை வந்த அக்கிம், கடந்த 27ம் தேதி, அமைந்தகரை போலீசில் புகாரளித்தார். போலீசார், மர்ம நபர்களின் மொபைல் எண்னை கண்காணித்ததில், தையூர் பகுதியில் இருப்பது தெரிந்தது.உடனே அங்கு சென்று, கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட, 10 பேர் கும்பலை நேற்று பிடித்தனர்.

மேலும், அங்கு ஒரு வீட்டில், படுகாயங்களுடன் இருந்த அப்துல் ஜாபர், தவ்பீக் ராஜா மற்றும் ரகுமான் என்பவரை மீட்டனர்.முதல்கட்ட விசாரணையில், அப்துல் ஜாபர் குறைந்த விலையில் வைரம் வாங்கித் தருவதாக, செங்கல்பட்டைச் சேர்ந்த ஆண்டனி பெனிக்ஸ் ராஜ், 32, என்பவரிடம் மோசடி செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஆண்டனி பெனிக்ஸ் ராஜ் உள்ளிட்டோர் அபதுல் ஜாபர், தவ்பீக் ராஜா மற்றும் அப்துல் ஜாபரின் நண்பரான ரகுமான் என்பவரையும் கடத்தியுள்ளனர்.

பின், மூவரையும் தையூர் பகுதியில் தனி வீட்டில் அடைத்து வைத்து, பணம் கேட்டு ஒரு வாரம் கொடூரமாக தாக்கியது தெரிந்தது.கடத்தலில் தொடர்புடைய ஆண்டனி பெனிக்ஸ் ராஜ், இவரது காதலி அஸ்வினி, 22, திருப்போரூரைச் சேர்ந்த ரவுடி சுமன், 44, எண்ணுாரைச் சேர்ந்த வேல்முருகன், 44, பாபு, 48, புவனேஷ்வரன், 30, உள்ளிட்ட 10 பேரை கைது செய்து, அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


இந்திய நிகழ்வுகள்

நிலத்தகராறில் குழந்தைகளின் கண்களை பிடுங்கிய கொடூரன்பகூர்:நிலத்தகராறில் இரண்டு சிறார்களை கொடூரமாக கொலை செய்து அவர்களின் கண்களையும் தோண்டியெடுத்த தாய்மாமனை போலீசார் தேடுகின்றனர்.
ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அம்பாதிக் கிராமத்தில் வசிப்பவர் பிரேம் மராண்டி. இவருக்கு மர்ஷிலா 10 என்ற மகளும் பாபுலால் 8 என்ற மகனும் உள்ளனர். இவரது மைத்துனரும் குழந்தைகளின் தாய்மாமனுமான நேரு மராண்டிக்கு பிரேமுடன் நிலத்தகராறு இருந்தது.
இந்த தகராறில் பிரேம் மீது ஆத்திரம் அடைந்த நேரு மராண்டி சிறார்கள் மர்ஷிலா மற்றும் பாபுலால் இருவரையும் நேற்று முன் தினம் மாலையில் வயலுக்கு அழைத்துச் சென்று கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். மேலும் இருவரின் கண்களையும் தோண்டி எடுத்துள்ளார். குழந்தைகளின் சடலங்கள் நேற்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுகுறித்து பகூர் மாவட்ட எஸ்.பி. ஜனார்தனன் கூறுகையில் “குழந்தைகளை கொன்று விட்டு தலைமறைவாக உள்ள நேரு மராண்டியை தீவிரமாக தேடி வருகிறோம். அவருடைய தந்தை பிரதான் மராண்டி தாய் புதி ஹன்ஸ்தா சகோதரன் குமஸ்தா மராண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது”என்றார்.'மாஜி' முதல்வர் எடியூரப்பா பேத்தி பெங்களூரில் துாக்கிட்டு தற்கொலைபெங்களூரு:கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி, பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடகா முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி. இவரது மகள் சவுந்தர்யா, 30, பெங்களூரின் வசந்த நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தார். இவர் எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றினார்.இவருக்கும், டாக்டர் நீரஜ் என்பவருக்கும் 2018ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒன்பது மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. சவுந்தர்யா கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஜன்னல் வழியே
இந்நிலையில் நேற்று காலை கணவர் பணிக்கு சென்றதும், சவுந்தர்யா தன் அறைக்கு சென்று கதவைப் பூட்டி கொண்டார். 10:00 மணியளவில் உணவு சாப்பிட வரும்படி வீட்டு வேலைக்கார பெண் கதவை தட்டியுள்ளார். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவர் நீரஜுக்கு தகவல் கொடுத்தார். அவர் 10:30 மணிக்கு வீட்டுக்கு வந்து அறைக்கதவை தட்டினார். அப்போதும் திறக்க வில்லை.பக்கத்து வீட்டு பால்கனியில் இருந்து ஜன்னல் வழியே பார்த்த போது சவுந்தர்யா மின்விசிறியில் துாக்கில் தொங்குவது தெரிய வந்தது.
உடனே கதவை உடைத்து உள்ளே சென்றனர். துாக்கில் தொங்கிய சவுந்தர்யாவை இறக்கி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி, டாக்டர்கள் சவுந்தர்யா உயிரை காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லை.
பரிசோதனை
அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.பிரேத பரிசோதனைக்கு பின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, எடியூரப்பாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். பேத்தியின் நெற்றியை தடவி கொடுத்து எடியூரப்பா கண்ணீர் விட்டு கதறி அழுதார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
29-ஜன-202215:06:51 IST Report Abuse
sridhar தொழிற் சாலையில் கலப்படம்: தேயிலை துாள் அறைக்கு 'சீல்' அடுத்த இலவசம் குடுக்க உள்ளாட்சி தேர்தலுக்கு ரெடி பண்ரங்க சார் அதுக்குள்ளே வந்துட்டேங்களே பாஸ் அட போங்க பாஸ் இந்த விளையாட்டு உங்களுக்கு புரியவே இல்ல
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஜன-202208:22:36 IST Report Abuse
Kasimani Baskaran "கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை தரமாக இல்லை" - கமிசன் கொடுத்துவிட்டு மீதமிருக்கும் பணத்தில் இதுபோலச்செய்யவில்லை என்றால் நொடித்துத்தான் போக வேண்டும். தீம்க்கா ஆட்சியின் பொழுது இதுபோலத்தான் குடிசைமாற்று வாரியத்துக்கு கட்டிடம் கட்டி இடிந்தும் விழுந்துவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X