வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடு, மேஜை மீது துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்ததாக கூறுவது போல் உள்ளது என ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதர் ஜான் சல்லிவன் தெரிவித்தார்.
![]()
|
உக்ரைனில் ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் வசிக்கின்றனர். அந்நாட்டை தங்கள் கைப்பிடியில் வைத்திருக்க ரஷ்யா விரும்புகிறது. உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமாக செல்ல விரும்புகிறார். அவர்களது நேட்டோ கூட்டமைப்பிலும் இணைய திட்டமிடுகிறார். அதன் மூலம் நேட்டோ படைகள் உக்ரைனில் வந்தால் ரஷ்யாவுக்கு சிக்கல் ஏற்படும்.
இதனை அச்சுறுத்தலாக கருதி உக்ரைன் எல்லையில் ஆயிரக்கணக்கானோர் கொண்ட படைகளை அனுப்ப ரஷ்யா தயார் நிலையில் உள்ளது. இதனால் அப்பிராந்தியத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
![]()
|
இந்நிலையில் ரஷ்யாவின் செயல்பாடு பற்றி அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜான் சல்லிவன் கூறியதாவது: போரை விரும்பவில்லை என ரஷ்யா கூறுகிறது.
ஆனால் ராணுவ போர் பயிற்சி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்களை குவிப்பது அசாதாரணமானது. பேச்சுவார்த்தைக்கு என வந்துவிட்டு மேஜை மீது துப்பாக்கியை வைத்துக்கொண்டு அமைதியை விரும்புகிறேன் என்பது அச்சுறுத்துவதாகும். ரஷ்ய அரசு அதன் சொல்லுக்கு உண்மையாக இருக்கும், உக்ரைனை ஆக்கிரமிக்க திட்டமிடாது என நம்புகிறோம். ஆனால் ஆக்கிரமிக்கும் திறன் அதற்கு உள்ளது என்பதே உண்மை.
உக்ரைன் பிரச்னையில் பேச்சுவார்த்தைக்கு திட்டமிடுதல் குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ அனுப்பிய எழுத்துப்பூர்வ ஆவணங்களுக்கு, ரஷ்யாவின் பதிலை வாஷிங்டன் எதிர்பார்க்கிறது. மேலும் உக்ரைனின் எல்லைகளுக்கு அருகிலிருந்து ரஷ்யா தனது துருப்புகளை திரும்பப் பெற வேண்டும்.
உக்ரைனுக்குள் ஊடுருவினால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பது என்பது மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கையில் ஒரு பகுதி மட்டுமே. ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது, ரஷ்யாவிலிருந்து ஜெர்மனுக்கு செல்லும் இயற்கை எரிவாயு குழாயின் செயல்பாட்டை நிறுத்துவது போன்ற நடவடிக்கையும் இருக்கும். என கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement