துவக்க நாளில் வேட்புமனு பூஜ்யம்: அமாவாசைக்கு காத்திருக்கும் அரசியல் கட்சியினர்!

Updated : ஜன 29, 2022 | Added : ஜன 29, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
கோவை: கவுன்சிலர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் நேற்று துவங்கிய நிலையில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் ஒருவர் கூட மனுத் தாக்கல் செய்யவில்லை. 'நல்ல நாளில்' களம் இறங்கலாம் என, கட்சி வேட்பாளர்கள் திட்டமிட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, ஏழு நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் தேர்தல்

கோவை: கவுன்சிலர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் நேற்று துவங்கிய நிலையில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் ஒருவர் கூட மனுத் தாக்கல் செய்யவில்லை. 'நல்ல நாளில்' களம் இறங்கலாம் என, கட்சி வேட்பாளர்கள் திட்டமிட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



latest tamil news



கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, ஏழு நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. மாநகராட்சியில், 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, ஐந்து மண்டல அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. காலை, 10:00 முதல் மாலை, 5:00 வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.மனு தாக்கல் துவக்க நாளான நேற்று மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் வேட்புமனு தாக்கல் எதுவும் இல்லை.


இதேபோல் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் மனு தாக்கல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி நான்கு மண்டலங்களில் நேற்று வேட்பு மனு படிவங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மட்டும், 316 பேர் மனு படிவம் வாங்கி சென்றனர். ஆனால், நேற்று ஒருவர் கூட மனுத் தாக்கல் துவங்கிய முதல் நாளில் மனுத் தாக்கல் செய்யவில்லை.


latest tamil news



வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் மங்களகரமாக கருதி மனு தாக்கல் அதிகமாக இருக்கும். ஆனால், நேற்று ஒருவர் கூட தாக்கல் செய்யவில்லை. இன்று சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மனுத்தாக்கலுக்கு பிப்., 4ம் தேதி வரை அவகாசம் உள்ளது.வரும் 31ம் தேதி, (திங்கள்) அமாவாசை நாள் என்பதாலும், அதன்பின் வளர்பிறை நாள் என்பதாலும் அந்த இரு நாட்களிலும் மனுத்தாக்கல் செய்யலாம் என அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், அந்த நாட்களில், வேட்புமனு தாக்கல் களை கட்டும்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran K - Hosur,இந்தியா
30-ஜன-202200:49:37 IST Report Abuse
Ravichandran K பெரியார் மண்.... மானமுள்ளவர்கள் விழித்துக் கொள்ளட்டும்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
30-ஜன-202200:04:43 IST Report Abuse
Aarkay பகுத்தறிவு பாசறை உபதேசமெல்லாம் ஊருக்குத்தான்
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
29-ஜன-202215:51:25 IST Report Abuse
Balaji ஜெயாவினால் அதிமுக வெளிப்படையாக செய்தது.. தீம்கா கிளீனர் வழியில் எல்லாமே ஒளிவுமறைவாக செய்கிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X