‛நியோகோவ் ' வைரஸ் குறித்து விரிவாக ஆராய வேண்டும்: உலக சுகாதார அமைப்பு கருத்து

Updated : ஜன 30, 2022 | Added : ஜன 29, 2022 | கருத்துகள் (14)
Advertisement
மாஸ்கோ: தென் ஆப்பிரிக்காவில் மிக தீவிரம் வாய்ந்த 'நியோகோவ்' என்ற புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவத்துவங்கிய சீனாவின் வூஹான் நகரை சேர்ந்த ஆய்வாளர்கள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 'நியோகோவ்' என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.இது
நியோகோவ்,  வைரஸ், உலக சுகாதார அமைப்பு, கருத்து

மாஸ்கோ: தென் ஆப்பிரிக்காவில் மிக தீவிரம் வாய்ந்த 'நியோகோவ்' என்ற புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவத்துவங்கிய சீனாவின் வூஹான் நகரை சேர்ந்த ஆய்வாளர்கள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 'நியோகோவ்' என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.இது தற்போது பரவி வரும் கொரோனா வைரசின் உருமாறிய வகை அல்ல என்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 2012 மற்றும் 2015ல் பரவி மிகப் பெரிய அளவில்நுரையீரல் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வகைகளை விட இது அதிக வீரியம் மிக்கது என்றும் தொற்று பாதிப்புக்கு ஆளாகும் மூவரில் ஒருவர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு, ரஷ்யாவை சேர்ந்த செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: தென் ஆப்ரிக்காவில் வாழும் வவ்வால்களிடம் நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வைரசால் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது குறித்து இன்னும் விரிவாக ஆய்வு நடத்தப்பட வேண்டும். இந்த வைரஸ் தொடர்பாக உலக விலங்குகள் நல அமைப்பு, உணவு மற்றும் விவசாய கழகம் மற்றும் ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.


latest tamil news


மனிதர்களிடம் ஏற்படும் 75 சதவீத தொற்று நோய்களுக்கு விலங்குகள் தான் ஆதாரமாக உள்ளன. பல வைரஸ்களுக்கு ஆதாரமுள்ள வவ்வால்கள் உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவ வருகின்றன. சீனா வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
30-ஜன-202206:08:16 IST Report Abuse
Nagercoil Suresh குளத்தில் விஷத்தை கலந்துவிட்டு ஊர் மக்களுக்கு அறிவுரை கூறுவதைபோல் செயல்படுகிறது சீனா, கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து பரவவில்லை வவ்வாலிடமிருந்து நேராக மனிதனுக்கு பரவியது என உலக மக்களிடம் கூறி தப்ப முயற்சிக்கும் தந்திரம்..விலங்குகளிடமிருந்தும், பறவைகளிடமிருந்தும் வைரஸ் அவ்வாறு பரவுவது அரிதிலும் அரிது.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-ஜன-202204:13:08 IST Report Abuse
NicoleThomson சீன விஞ்ஞானிகளின் தந்தை சீ ஜின்குபின்க்கு என்ன சொல்றாருனா
Rate this:
Cancel
Kumar Ramanathan - chennai,இந்தியா
29-ஜன-202221:44:02 IST Report Abuse
Kumar Ramanathan பார்மா சும்பேணி சேல்ஸ் கம்மி ஆகிவிட்டால் புது புது வைரஸ் கண்டிப்பாக வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X