புதுச்சேரி அமைச்சர் பெயரில் பணம் பறிக்க முயன்றவர் கைது

Added : ஜன 29, 2022
Advertisement
புதுச்சேரியில் அமைச்சரின் பெயரைக் கூறி, பணம் பறிக்க முயன்ற சென்னை வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி வர்த்தக நிறுவனங்களுக்கு, சில தினங்களாக தொலைபேசியில் பேசிய நபர், 'அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகிறேன். போஸ்டர் அடிக்க பணம் தேவைப்படுகிறது. எனது வங்கி கணக்கிற்கு அனுப்பிவிடுங்கள்' எனக்கூறி வந்தார். வர்த்தக நிறுவனத்தினர் இது குறித்து
புதுச்சேரி அமைச்சர் பெயரில் பணம் பறிக்க முயன்றவர் கைது

புதுச்சேரியில் அமைச்சரின் பெயரைக் கூறி, பணம் பறிக்க முயன்ற சென்னை வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.



புதுச்சேரி வர்த்தக நிறுவனங்களுக்கு, சில தினங்களாக தொலைபேசியில் பேசிய நபர், 'அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகிறேன். போஸ்டர் அடிக்க பணம் தேவைப்படுகிறது. எனது வங்கி கணக்கிற்கு அனுப்பிவிடுங்கள்' எனக்கூறி வந்தார். வர்த்தக நிறுவனத்தினர் இது குறித்து அமைச்சரிடம் தெரிவித்தனர். அமைச்சர் தன் உதவியாளர் சீனிவாசன், 35, மூலம் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில், சென்னை, தண்டையார்பேட்டை சேர்ந்த முகமது ரபிக், 30, அமைச்சர் பெயரில் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.கைது செய்யப்பட்ட முகமது ரபிக், பிரபல அரசியல்வாதிகளை போல பேசி, பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டவர். கடந்த 2014 முதல் இதுபோன்ற மோசடியில், தமிழக போலீசில் அவர் மீது எட்டு வழக்குகள் உள்ளன. புதுச்சேரியில் முதல் முறை பணம் பறிக்க முயன்ற போதே சிக்கியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X