அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைகள் நடமாட்டம்: கேமராவில் பதிவாகாததால் குழப்பம்

Added : ஜன 29, 2022
Advertisement
வேலுார் : குடியாத்தம் அருகே, அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைகள் நடமாட்டம் கேமராவில் பதிவாகாததால் வனத்துறையினர் குழப்பமடைந்துள்ளனர்.ஆந்திரா மாநிலம், குப்பம் வனப்பகுதியில் இருந்து 25 க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், வேலுார் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதியில் புகுந்து கல்லப்பாடி, கலர்பாளையம், மோர்த்தானா பகுதிகளில் ஏராளமான ஆடுகளை அடித்துக் கொன்றது. சிறுத்தைகளின்


வேலுார் : குடியாத்தம் அருகே, அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைகள் நடமாட்டம் கேமராவில் பதிவாகாததால் வனத்துறையினர் குழப்பமடைந்துள்ளனர்.ஆந்திரா மாநிலம், குப்பம் வனப்பகுதியில் இருந்து 25 க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், வேலுார் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதியில் புகுந்து கல்லப்பாடி, கலர்பாளையம், மோர்த்தானா பகுதிகளில் ஏராளமான ஆடுகளை அடித்துக் கொன்றது. சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 10 இடங்களில் வனத்துறையினர் கேமராவை கடந்த வாரம் பொருத்தினர். ஆனால் ஒரு சிறுத்தை கூட இது வரை கேமராவில் பதிவாகவில்லை. வனத்துறையினர் கூறியதாவது: தனகொண்டபள்ளி, கல்லப்பாடி பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இரவு நேரத்தில் உள்ளது. ஆனால் இங்குள்ள கேமராவில் பதிவாகவில்லை.
சிறுத்தைகள் எங்கு பதுங்கியுள்ளது என தெரியாமல் உள்ளது. சிறுத்தைகள் ஆடுகளை துாக்கிச் செல்லும் சம்பவங்கள் குறையவில்லை. வீடுகளுக்கு முன்பு ஆடுகளை கட்ட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். ஆந்திரா மாநில வனத்துறையினரும் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X