போலி அடங்கல் வழங்கிய வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்

Added : ஜன 29, 2022
Advertisement
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், 42, இவர் திருக்கழி அருகே, கணக்கி கிராம வி.ஏ.ஓ. வாக இருந்தார். முன்பு, பூலாங்கால் வி.ஏ.ஒ., வாக இருந்த போது, கடந்த வருடம் பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக, விவசாயிகளுக்கு. போலியான அடங்கல் வழங்கியதில், பலர் இன்சுரன்ஸ் தொகை பெற்றுள்ளனர். இதை சம்பந்தப்பட்ட இன்சுரன்ஸ் நிறுவனம் கண்டு பிடித்து,

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், 42, இவர் திருக்கழி அருகே, கணக்கி கிராம வி.ஏ.ஓ. வாக இருந்தார். முன்பு, பூலாங்கால் வி.ஏ.ஒ., வாக இருந்த போது, கடந்த வருடம் பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக, விவசாயிகளுக்கு. போலியான அடங்கல் வழங்கியதில், பலர் இன்சுரன்ஸ் தொகை பெற்றுள்ளனர். இதை சம்பந்தப்பட்ட இன்சுரன்ஸ் நிறுவனம் கண்டு பிடித்து, வேளாண்மை துறை இயக்குநருக்கு புகார் அனுப்பியுள்ளனர். அதை இயக்குநர் விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ளார். மாவட்ட கலெக்டர் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., விற்கு, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, ஆர்.டி.ஓ., கல்யாணகுமார், விசாரணை செய்ததில், போலியான அடங்கல்கள் வழங்கியது தெரிய. வந்தது. இதையடுத்து, ஆர்.டி.ஓ., வி.ஏ.ஓ. ஜெயக்குமாரை சஸ்பெண்ட் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X