உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை நகராட்சி தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு போட்டியாக ஆளுங்கட்சியினர் சுயே.,யாக போட்டியிட ஆயுத்தமாகி வருவதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதன்முறையாக நகராட்சி பதவி இடங்களுக்கான தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் அ.தி.மு.க., வினர் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தி.மு.க., வில் தேர்தலில் வார்டு கவுன்சிலர்களாக போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வுகான நேர்காணல் நேற்று நடந்தது. ஆளுங்கட்சி என்பதால் தேர்தலில் போட்டியிட தி.மு.க.,வில் பலரும் ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில் உளுந்தூர்பேட்டை நகராட்சி 24 வார்டு பகுதிகளில் 20 வார்டுகளில் தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வார்டு பகுதிகளை முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற 4 வார்டு பகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு வார்டு கவுன்சிலர்கள் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆளும் கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டு பகுதிகளில் சுயே.,யாக நின்று போட்டியிடவும் தி.மு.க.,வில் ஆயத்தமாகி வருகின்றனர். இது தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE