சோழவந்தான்:- முள்ளிப்பள்ளம் விவசாயி சண்முகவேல் மகள் சங்கீதா. இவர் கடந்த ஆண்டு சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு முடித்தார்.'நீட்' தேர்வில் 256 மதிப்பெண்கள் பெற்றார். மாணவியின் மருத்துவ படிப்பிற்கு அரசு உள் ஒதுக்கீட்டில் கோவை தனியார் மருத்துவக் கல்லுரரியில் இடம் கிடைத்துள்ளது. தலைமை ஆசிரியை கீதா, உதவி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு சால்வை அணிவித்து பாராட்டி பரிசாக புத்தகம் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE