உணவில் விஷம் கலந்து 10 மயில்களை கொன்றவர் கைது| Dinamalar

உணவில் விஷம் கலந்து 10 மயில்களை கொன்றவர் கைது

Added : ஜன 29, 2022 | |
திருப்பத்துார் : திருப்பத்துார் அருகே, உணவில் விஷம் கலந்து 10 மயில்களை கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த இருளாப்பட்டு பகுதியில் உள்ள மலையில் இருந்து ஏராளமான மயில்கள் அங்குள்ள விவசாய நிலத்திற்கு வந்து தழை, இலைகள் தின்று வருகின்றனர். கடந்த 26 ம் தேதி 10 மயில்கள் அங்குள்ள நிலத்தில் இறந்து கிடந்தன. கால்நடை மருத்துவர்கள் ஆய்வு

திருப்பத்துார் : திருப்பத்துார் அருகே, உணவில் விஷம் கலந்து 10 மயில்களை கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த இருளாப்பட்டு பகுதியில் உள்ள மலையில் இருந்து ஏராளமான மயில்கள் அங்குள்ள விவசாய நிலத்திற்கு வந்து தழை, இலைகள் தின்று வருகின்றனர். கடந்த 26 ம் தேதி 10 மயில்கள் அங்குள்ள நிலத்தில் இறந்து கிடந்தன. கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்ததில், உணவில் விஷம் வைத்து மயில்களை கொலை செய்தது தெரியவந்தது. திருப்பத்துார் வனத்துறையினர் அதே பகுதியை சேர்ந்த மேகநாதன், 38, என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் விஷ முறிவு, ஆஸ்மா போன்ற நோய்களை குணமாக்க மருந்து தயாரிக்க மயல்களுக்கு உணவில் விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.வனத்துறையினர் மேகநாதனை இன்று கைது செய்தனர். வனத்துறையினரை கேட்டதற்கு, தேசிய பறவையான மயிலை கொல்வது சட்டப்படி தவறு, இதற்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X