மேஜையில் பணத்தை கொட்டி சீட் கேட்ட தி.மு.க., பிரமுகர்கள்

Added : ஜன 29, 2022 | கருத்துகள் (7)
Advertisement
திருப்பத்துார் : திருப்பத்துார் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நேர்காணலில் பங்கேற்ற தி.மு.க., வினர் மேஜையில் 20 லட்சம் ரூபாய் பணத்தை கொட்டி சீட் கேட்டனர்.திருப்பத்துார் நகராட்சியில் 36 வார்டுகளில் போட்டியிட தி.மு.க., சார்பில் 154 பேர் விண்ணப்பித்திருந்தனர். திருப்பத்துார் நகர தி.மு.க., அலுவலகத்தில் இன்று நேர்காணல் நடந்தது. மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் நடந்த நேர்
மேஜையில் பணத்தை கொட்டி சீட் கேட்ட தி.மு.க., பிரமுகர்கள்

திருப்பத்துார் : திருப்பத்துார் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நேர்காணலில் பங்கேற்ற தி.மு.க., வினர் மேஜையில் 20 லட்சம் ரூபாய் பணத்தை கொட்டி சீட் கேட்டனர்.

திருப்பத்துார் நகராட்சியில் 36 வார்டுகளில் போட்டியிட தி.மு.க., சார்பில் 154 பேர் விண்ணப்பித்திருந்தனர். திருப்பத்துார் நகர தி.மு.க., அலுவலகத்தில் இன்று நேர்காணல் நடந்தது. மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் நடந்த நேர் காணலில் திருப்பத்துார் எம்.எல்.ஏ., நல்லதம்பி, நகர செயலளார் ராஜேந்திரன் பங்கேற்றனர்.அப்போது, கவுன்சிலர் சீட் கொடுத்தால், எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும், அதை எப்படி திரட்டப் போகிறீர்கள், கடன் வாங்கியா, சொந்த பணமா அல்லது சொத்துக்களை விற்பனை செய்தா என்று கேள்வி எழுப்பப்பட்டது. நேர்காணலில் பங்கேற்றவர்கள் இதை கேட்டு கடுப்பாயினர். உங்களுக்கு தேவை தேர்தல் செலவு செய்ய பணம், அது எப்படி வந்தால் என்ன என்று கோபமாக கேட்டனர். சிலர் 20 லட்சம் ரூபாயை எடுத்து வந்து மேஜையில் கொட்டி சீட் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை படம் எடுக்க முயன்ற போட்டோகிராபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் நேர்காணல் நடத்தியவர்கள், தெரியாமல் கேட்டு விட்டோம், பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி, நேர் காணலை அவசர, அவசரமாக முடித்துக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A P - chennai,இந்தியா
04-பிப்-202213:39:18 IST Report Abuse
A P தனது வங்கிக்கணக்கிலிருந்து இவ்வளவு பெரிய தொகை ரூபாய் நோட்டுக்கள் பெற்று வர சட்டம் அனுமதிக்கிறதா? ஆச்சர்யமாக உள்ளதே? இதனை வருமான வரி ஆபீசர்கள் துருவினால் ஏகப்பட்ட விஷயங்கள் வெளிவரலாம். இன்னும் இது போல எங்கெங்கு நடந்தாலும் கண்காணிக்கப் படவேண்டும்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
31-ஜன-202206:09:20 IST Report Abuse
Indhuindian அவரு ஏதோ டி காபி சாப்பிட வெச்சிருந்ததை பாக்கெட்டுக்கேந்து எடுத்தாரு அதுக்கு போயி இப்படி அக்கப்போர் பண்ணலாமா? அவரை அவமானப்படுத்தலாமா?
Rate this:
Cancel
Sangikikaluku Sangu Oothupavan - THENI,இந்தியா
30-ஜன-202214:39:39 IST Report Abuse
Sangikikaluku Sangu Oothupavan நீங்க சொல்லுறீங்க நாங்க நம்புறோம் ???????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X