தேர்தல் பறக்கும் படையினர்வாகன சோதனையில் தீவிரம்

Added : ஜன 29, 2022 | |
Advertisement
தியாகதுருகம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 24 பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 3 நகராட்சிகள், சங்கராபுரம், சின்னசேலம், வடக்கநந்தல், தியாகதுருகம் மணலூர்பேட்டை ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு வரும் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

தியாகதுருகம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 24 பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 3 நகராட்சிகள், சங்கராபுரம், சின்னசேலம், வடக்கநந்தல், தியாகதுருகம் மணலூர்பேட்டை ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு வரும் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு கடந்த 28 ம் தேதி துவங்கியது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனை செய்ய பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 24 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளது. துணை தாசில்தார் அல்லது துணை பி.டி.ஓ., தலைமையில் இரு போலீசார் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடந்து வருகிறது. சோதனையின்போது வீடியோ வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. முறையான கணக்கு இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்கள், துணி மற்றும் சால்வைகள் எடுத்துச் செல்வதையும் தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X