பெரம்பலுார்: -பெரம்பலுார் அருகே, அரசு பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவரை குன்னம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை, வியாசர்பாடி கல்யாணபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்,50, ஆட்டோ டிரைவரான இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துவிட்டு, தனது பிறந்த ஊரான பெரம்பலுார் மாவட்டம், முருக்கன்குடி கிராமத்துக்கு வந்தார். 45 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் சென்று செட்டிலாகிவிட்டதால், உறவினர்கள் வீட்டுக்கு சென்றபார்த்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் குன்னம் கிராமத்துக்கு வந்தவர் மது அருந்தினார்.குடிபோதையில், குன்னம் பஸ் ஸ்டாப் பகுதியில் தள்ளாடியபடி பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, இரவு 8:45 மணியளவில், அவ்வழியே பெரம்பலுாரிலிருந்து அரியலுார் நோக்கி சென்ற டி.எண் 45 எண் 3309 என்ற எண்ணுள்ள அரசு பஸ், அப்பகுதியில் நின்று பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டிருந்தது.அப்போது, அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது பாலமுருகன் கல் வீசினார். அதில், பஸ்சின் கண்ணாடி உடைந்து சேதமானது. இது குறித்து, அரசு பஸ் டிரைவர் குரும்பலுார் கிராமத்தை சேர்ந்த கணேஷ்ராஜா,45, என்பவர் கொடுத்த புகாரின்பேரில், குன்னம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், பாலமுருகன் மீது, பொது சொத்தை சேதப்படுத்தல் பிரிவின்கீழ் வழக்கு பதிந்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாலமுருகனை சிறையில் அடைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE