பாசறை திரும்பிய முப்படை வீரர்கள்: விதவிதமாக ஒளிர்ந்த ட்ரோன்கள்

Updated : ஜன 30, 2022 | Added : ஜன 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படைகள், பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.விதவிதமாக ட்ரோன்கள் ஒளிர்ந்தன.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரோந்து செல்லும் படைவீரர்களை இரவில் மீண்டும் கோட்டைக்கு அழைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த 'பீட்டிங் தி ரிட்ரீட்' எனும் நிகழ்ச்சி, சுதந்திரத்துக்குப் பின்பும் தொடர்கிறது. குடியரசு
பாசறை, முப்படை வீரர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படைகள், பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.விதவிதமாக ட்ரோன்கள் ஒளிர்ந்தன.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரோந்து செல்லும் படைவீரர்களை இரவில் மீண்டும் கோட்டைக்கு அழைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த 'பீட்டிங் தி ரிட்ரீட்' எனும் நிகழ்ச்சி, சுதந்திரத்துக்குப் பின்பும் தொடர்கிறது. குடியரசு தினத்தின் 3வது நாள் மாலையில், டில்லியில் உள்ள ராஜ்பாத்தின் வடக்கு தெற்கு கட்டட வளாகங்களுக்கு நடுவே உள்ள பகுதியில் நடத்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், இன்று (ஜன.,29) முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.


latest tamil news


முப்படைகளின் பேண்ட் குழுவினர், டிரம்செட் முழங்கி, தேசிய கீதம் இசைக்க இந்திய கொடி ஏற்றப்பட்டது. பின்னர், வெவ்வேறு இசைக்குழுக்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், பல வகையான வாத்தியங்களுடன் இசை முழங்கப்பட்டது. கமாண்டர் விஜய் சார்லஸ் தலைமையில் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்தாண்டு வெளிநாட்டு இசை நிகழ்ச்சி இடம்பெறவில்லை. ஆயிரம் டுரோன்கள் மூலம் வர்ணஜாலம் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


latest tamil news


முப்படை வீரர்களின் மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
30-ஜன-202200:04:19 IST Report Abuse
மலரின் மகள் நமது ராணுவ பிரமாண்டம் எவ்வளவு மகத்தானது என்று கண்டு களிப்புற்று மெய்சிலிர்த்து பிஹாரிதாமாவின் தாள் பணிவோம். இது போன்ற நிகழ்வுகள் அந்நியர்களுக்கு அச்சுறுத்தல்களையும், தேசத்தின் மீது படையெடுக்கவோ ஆக்கிரமிக்கவோ முடியாது என்று அவர்கள் அறிந்து அஞ்சுவதற்கும் அடிகோலும். வலிமை மிக்க நெஞ்சினாய் வா வா வா என்று பாரதி பாடியது மனதில் வந்து தங்குகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X