வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படைகள், பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.விதவிதமாக ட்ரோன்கள் ஒளிர்ந்தன.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரோந்து செல்லும் படைவீரர்களை இரவில் மீண்டும் கோட்டைக்கு அழைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த 'பீட்டிங் தி ரிட்ரீட்' எனும் நிகழ்ச்சி, சுதந்திரத்துக்குப் பின்பும் தொடர்கிறது. குடியரசு தினத்தின் 3வது நாள் மாலையில், டில்லியில் உள்ள ராஜ்பாத்தின் வடக்கு தெற்கு கட்டட வளாகங்களுக்கு நடுவே உள்ள பகுதியில் நடத்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், இன்று (ஜன.,29) முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முப்படைகளின் பேண்ட் குழுவினர், டிரம்செட் முழங்கி, தேசிய கீதம் இசைக்க இந்திய கொடி ஏற்றப்பட்டது. பின்னர், வெவ்வேறு இசைக்குழுக்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், பல வகையான வாத்தியங்களுடன் இசை முழங்கப்பட்டது. கமாண்டர் விஜய் சார்லஸ் தலைமையில் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்தாண்டு வெளிநாட்டு இசை நிகழ்ச்சி இடம்பெறவில்லை. ஆயிரம் டுரோன்கள் மூலம் வர்ணஜாலம் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முப்படை வீரர்களின் மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE