தரங்கம்பாடி முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து விபத்து

Added : ஜன 29, 2022
Advertisement
மயிலாடுதுறை: தரங்கம்பாடி முகதுவாரம் தயிர் சரியில்லாததால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தரங்கம்பாடி மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான மீன்பிடி துறைமுகம் தற்போது ரூ 170

மயிலாடுதுறை: தரங்கம்பாடி முகதுவாரம் தயிர் சரியில்லாததால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தரங்கம்பாடி மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான மீன்பிடி துறைமுகம் தற்போது ரூ 170 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் துறைமுகத்தின் முகத்துவாரம் உரிய அளவில் அளிக்கப்படாததால் கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதுடன், மீன்பிடி படகுகள் கடலுக்குச் சென்று திரும்பும் போது விபத்துக்குள்ளாகி படகுகளும், மீனவர்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது இந் நிலையில் வழக்கம் போல் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பி உள்ளனர். அப்போது துறைமுகத்தில் முகத்துவாரம் அருகே கோவிந்தம்மாள் என்பவருக்கு சொந்தமான பைபர் படகு தரைதட்டி கவிழ்ந்ததுடன், வெற்றிவேல் என்பவரின் படகு முகத்துவாரத்தில் உள்ள கருங்கல்லில் மோதி கவிழ்ந்தது. இவ்விபத்தில் படகில் இருந்த மீனவர்கள் சிறு காயங்களுடன் நீந்தி கரை சேர்ந்தனர்.
படகுகள் கவிழ்வதை துறைமுகத்திலிருந்து கண்ட மீனவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் உதவியுடன் கவிழ்ந்த படகுகளை மீட்டனர். மீண்டும் விபத்து ஏற்படாமல் தவிர்க்க துறைமுகத்தில் முகத்துவாரத்தை சீரமைத்து தர வேண்டும் என தரங்கம்பாடி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X