நீட் தேர்வில் தேறிய 'டெய்லர்' மகன்: டாக்டர் கனவை நனவாக்கிய இட ஒதுக்கீடு!

Updated : ஜன 29, 2022 | Added : ஜன 29, 2022 | கருத்துகள் (22)
Advertisement
அவிநாசி:பனியன் நிறுவனத்தில் பணி செய்யும் 'டெய்லர்' மகன், அரசு பள்ளியில் பயின்று 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி திருமுருகன்பூண்டி அருகேயுள்ள பெரியாயிபாளையம் பகுதியில் வசிப்பவர். கணேசன்; பனியன் நிறுவனத்தில் டெய்லர். தாய், பாரதி. இவர்களது மகன், ஜெகன் பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அவிநாசி:பனியன் நிறுவனத்தில் பணி செய்யும் 'டெய்லர்' மகன், அரசு பள்ளியில் பயின்று 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.



latest tamil news



திருப்பூர் மாவட்டம், அவிநாசி திருமுருகன்பூண்டி அருகேயுள்ள பெரியாயிபாளையம் பகுதியில் வசிப்பவர். கணேசன்; பனியன் நிறுவனத்தில் டெய்லர். தாய், பாரதி. இவர்களது மகன், ஜெகன் பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு படித்து, 'நீட்' தேர்வெழுதினான். 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் இம்மாணவன், மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.


latest tamil news



மாணவன் ஜெகன் கூறுகையில், 'என் பெற்றோருக்கு நான் டாக்டராக வேண்டும். என்ற எண்ணம் இருந்தது. என். பயோலஜி ஆசிரியை சுமித்ரா, டாக்டர் படிப்புக்குரிய பயிற்சி பெற என்னை சிறப்பாக ஊக்குவித்தார். அதன் மூலம் எனக்கும் அந்த ஆர்வம் வந்தது. தலைமையாசிரியர் உள்ளிட்ட பிற ஆசிரியர்களும் நல்லமுறையில் ஊக்குவித்தால், என்னால் வெற்றி பெற முடிந்தது, என்றார்.
மாணவனின் தந்தை கணேசன் கூறுகையில், "என் மகன் டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. அதற்கேற்ப, தலைமையாசிரியை உள்ளிட்டோர் சிறப்பான முறையில் ஊக்குவித்தனர். உள் இட ஒதுக்கீடால், எங்களை போன்ற சாமானியன் வீட்டு பிள்ளைக் கூட டாக்டராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார்.
பள்ளி தலைமையாசிரியர் குமரேசன் கூறுகையில், "பள்ளி வரலாற்றில் முதன் முறையாக, மாணவன் ஜெகன், நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளான். விடா முயற்சி, கடின உழைப்பே இதற்கு காரணம், என்றார். ஜெகனின் சகோதரி பூரணிஸ்ரீ; அரசுப்பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
03-பிப்-202206:13:58 IST Report Abuse
Indhuindian தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்ன்னு கேள்வி பட்டதில்லையா சும்மா மருத்துவ கல்லூரி தொறந்து வெச்சது காசு இருக்கவங்ககிட்டேந்து கொள்ளை அடிச்சி பிளஸ் டூ ல மென்னியை பிடிக்கற மாதிரி மார்க் வாங்கின மக்கு பசங்களுக்கெல்லாம் சீட் குடுக்கத்தானே ஒழிய இந்த மாதிரி தகுதி இருந்தும் வசதி இல்லமா இருக்கற மாணவர்களுக்கு சீட் கொடுக்கவா? உங்களுக்கு தெரியாதா முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை படக்கூடாதுன்னு. ஏதோ எடப்பாடி அரசு தயவுலே இப்போ ஏஷை பாஷைகெல்லாம் மருத்துவ படிப்பு கிடைக்குது. ஆனா நம்ம ஜனங்களுக்கு அது முக்கியம் இல்லே இலவசம் தான் வேணும் அது பல்லி விஷுந்த புலியா இருந்தா என்ன இல்லே க்ளாசில ஆத்தற மாதிரி வெல்லமா இருந்த என்ன இலவசம் இலவசம் தானே இதுதான் எங்க சமூக நீதி அதைத்தான் இப்போ அகில இந்தியாவுக்கும் குடுக்க ஏற்பாடு பண்நிக்கிட்டு இருக்கோம்
Rate this:
Cancel
sollai.n - kadapoor,இந்தியா
31-ஜன-202211:46:19 IST Report Abuse
sollai.n நன்றி மறந்த தமிழர்களுக்கு எடப்பாடியார் செய்த சேவைகளை பற்றி புரியவில்லை.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
30-ஜன-202220:30:36 IST Report Abuse
Sai ரொம்ப கேட்ட பேர் எடுத்துட்டோம் எப்படியாவது தமிழகத்தில் பாசாயிடணும்னு கஜகர்ணம் போடுது NEET நிர்வாகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X