சென்னை:கர்நாடகா அரசு திறந்த விட்ட காவிரி நீர், பயன்படுத்திய நீரின் அளவு போன்றவை பற்றி, பிப்., 2ம் தேதி கணக்கு பார்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்ய, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தை, பிப்ரவரி 2ம் தேதி டில்லியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நீர் வழங்கும் பருவத்தில், கர்நாடகா திறந்துள்ள நீரின் அளவு, அம்மாநிலம் பயன் படுத்திய நீரின் அளவு, தமிழகத்திற்கு வந்துள்ள நீரின் அளவு குறித்து, இக்கூட்டத்தில் கணக்கு பார்க்கப்பட உள்ளது.கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை, 2021ம் ஆண்டு அதிகளவில் கொட்டியது. இதனால், தமிழகத்திற்கு ஜன., 26ம் தேதி வரை 243 டி.எம்.சி., நீர் கிடைத்துள்ளது.\
இந்த காலகட்டத்தில் 166.8 டி.எம்.சி., நீர் மட்டுமே கிடைத்திருக்க வேண்டும். கூடுதலாக 76.4 டி.எம்.சி., நீர், தமிழகம் வந்துள்ளது. வரும் காலங்களில் மாத ஒதுக்கீட்டு அளவை, கர்நாடகா குறைக்க வாய்ப்புள்ளது. இந்த நீரை முழுமையாக வழங்கும்படி, இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் வலியுறுத்த உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE