சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலால், மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான, மின் தடை நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், துணை மின் நிலையங்களில் இருந்து மின் வழித்தடங்களில் மின்சாரத்தை அனுப்பி, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி, மின் கம்பம், கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் வினியோகம் செய்கிறது.அவற்றில் எப்போதும் மின்சாரம் செல்வதால், வெப்பத்துடன் இருக்கின்றன. இதனால், துணை மின் நிலையங்கள், மின் சாதனங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக, அந்த பணி நடக்கும் இடங்களில் உள்ள மின் இணைப்புகளில், காலை முதல் மாலை வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த விபரம், மின் வாரியம் சார்பில் பொது மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிப்., 19ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதனால், மாநிலம் முழுதும் எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்திஉள்ளது.இதற்காக தேர்தல் முடியும் வரை, மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான மின் தடை நிறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE