உ.பி., தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின்?

Updated : ஜன 30, 2022 | Added : ஜன 30, 2022 | கருத்துகள் (78) | |
Advertisement
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். சமீபத்தில் ஒரு அதிரடியான திட்டத்தை வைத்துக் கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார் அவர்.இதற்காக தி.மு.க., சீனியர் எம்.பி.,க்களிடம் அவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். 'பா.ஜ.,வை எதிர்கொள்ள

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். சமீபத்தில் ஒரு அதிரடியான திட்டத்தை வைத்துக் கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்



latest tamil news


அவர்.இதற்காக தி.மு.க., சீனியர் எம்.பி.,க்களிடம் அவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். 'பா.ஜ.,வை எதிர்கொள்ள எதிர்க்கட்சியினர் ஒன்று சேர வேண்டும் என்பதில் ஸ்டாலின் ஆர்வமாக உள்ளார். எனவே அவர் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு தர வேண்டும். இது தொடர்பாக அவர் கையெழுத்திட்ட ஒரு கடிதம் வேண்டும்' என, அகிலேஷ் யாதவ் தி.மு.க., - எம்.பி.,க்களிடம் கெஞ்சுகிறார்.ஸ்டாலின் படம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றாக நிற்கும் படத்தை உ.பி., முழுக்க 'போஸ்டராக' ஒட்டி பிரசாரம் செய்ய விரும்புகிறார் அகிலேஷ் யாதவ்.


latest tamil news


ஆனால், தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், உ.பி.,யில் தனித்து போட்டியிடுகிறது. அப்படியிருக்கையில் ஸ்டாலின், அகிலேஷ் யாதவிற்கு எப்படி ஆதரவு தர முடியும் என தி.மு.க., தரப்பில் சொல்லப்படுகிறதாம். 'தி.மு.க., - காங்., கூட்டணி தமிழக சட்டசபை, பார்லி., தேர்தல்களுக்கு மட்டும் தானே. இது உ.பி., சட்டசபை தேர்தல்' என அகிலேஷ் சொல்கிறாராம். 'அதோடு, உ.பி.,யில் காங்., ஆறு 'சீட்'டுகளில் வெற்றி பெற்றாலே பெரிய விஷயம். எனவே ஸ்டாலினை எனக்கு ஆதரவாக கடிதம் அளிக்க சொல்லுங்கள்' என்றும் தி.மு.க., - எம்.பி.,க்களிடம் சொல்லி வருகிறார், அகிலேஷ் யாதவ்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
30-ஜன-202218:06:07 IST Report Abuse
DVRR அப்போ நிச்சயமாக ஸ்டாலின் முஸ்லீம் தான் ஏன்னா ஒவைசி மம்தா எல்லாம் உத்தர பிரதேச தேர்தலுக்கு செல்கின்றார்கள். அங்கே போய் ஸ்டாலின் என்ன சொல்வார் எந்த மொழியில் பேசுவார் தெலுங்கா???இந்தியில் தான் அவர் பேசமுடியாது???சரி தமிழில் பேசுவார் என்றால் அவருக்கு மொழிபெயர்ப்பாளர் (ராகுலின் ஹிந்திக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் செய்தது போல) நாம் அனைவரும் மோதி இதை நிறைவேற்றணும் - இந்தியில் நாம் சாப்லோக் மோடி ஹீ போலோ என்று அந்த ஆள் உளறுவார் - தமிழாக்கம் : மோடியின் பெயரையே எல்லோரும் சொல்லுங்கள்
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
30-ஜன-202214:58:31 IST Report Abuse
Indhuindian ஸ்டாலின் பி ஜெ பி யின் ஸ்லீப்பர் செல் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. தேர்தலுக்கு முந்திய கருத்து கணிப்புப்படி பி ஜெ பி வெற்றி பெரும் என்று தெரிகிறது ஆனால் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் இரண்டாவது இடத்தில இருக்கும் சமாஜ்வாதி கட்சிக்கு கிடைக்கும் இடங்களை எவ்வளவு குறைக்க முடியுமோ அதற்க்கு பாடு படுவதே ஸ்டாலினின் குறிக்கோள் பாராட்டுக்கள்
Rate this:
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
30-ஜன-202214:57:08 IST Report Abuse
Vaduvooraan என்னடா இந்த சமாஜ்வாதிக்கு வந்த சத்திய சோதனை அப்போ ஹிந்தியில் இவர் செய்யப் போகிற பரப்புரைக்கு தயாராக வேண்டும். அப்போ தமிழ் தாய்..இந்தி பேய்..தமிழுக்கு தாலாட்டு...ஹூம்..அப்புறம் ஹிந்திக்கு....ன்னு என்னென்னமோ பேசுனது எல்லாம் அவ்ளோ தானா?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
30-ஜன-202216:09:52 IST Report Abuse
madhavan rajanஇவர் தமிழ் நாட்டில் தமிழை துண்டு சீட்டில் பார்த்துப் படிக்கும்போதே உளறல். இதில் அங்கு சென்று எந்த மொழியில் ..... என்ன சொல்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X