உ.பி., தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின்?| Dinamalar

உ.பி., தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின்?

Updated : ஜன 30, 2022 | Added : ஜன 30, 2022 | கருத்துகள் (78) | |
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். சமீபத்தில் ஒரு அதிரடியான திட்டத்தை வைத்துக் கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார் அவர்.இதற்காக தி.மு.க., சீனியர் எம்.பி.,க்களிடம் அவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். 'பா.ஜ.,வை எதிர்கொள்ள

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். சமீபத்தில் ஒரு அதிரடியான திட்டத்தை வைத்துக் கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்



latest tamil news


அவர்.இதற்காக தி.மு.க., சீனியர் எம்.பி.,க்களிடம் அவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். 'பா.ஜ.,வை எதிர்கொள்ள எதிர்க்கட்சியினர் ஒன்று சேர வேண்டும் என்பதில் ஸ்டாலின் ஆர்வமாக உள்ளார். எனவே அவர் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு தர வேண்டும். இது தொடர்பாக அவர் கையெழுத்திட்ட ஒரு கடிதம் வேண்டும்' என, அகிலேஷ் யாதவ் தி.மு.க., - எம்.பி.,க்களிடம் கெஞ்சுகிறார்.ஸ்டாலின் படம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றாக நிற்கும் படத்தை உ.பி., முழுக்க 'போஸ்டராக' ஒட்டி பிரசாரம் செய்ய விரும்புகிறார் அகிலேஷ் யாதவ்.


latest tamil news


ஆனால், தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், உ.பி.,யில் தனித்து போட்டியிடுகிறது. அப்படியிருக்கையில் ஸ்டாலின், அகிலேஷ் யாதவிற்கு எப்படி ஆதரவு தர முடியும் என தி.மு.க., தரப்பில் சொல்லப்படுகிறதாம். 'தி.மு.க., - காங்., கூட்டணி தமிழக சட்டசபை, பார்லி., தேர்தல்களுக்கு மட்டும் தானே. இது உ.பி., சட்டசபை தேர்தல்' என அகிலேஷ் சொல்கிறாராம். 'அதோடு, உ.பி.,யில் காங்., ஆறு 'சீட்'டுகளில் வெற்றி பெற்றாலே பெரிய விஷயம். எனவே ஸ்டாலினை எனக்கு ஆதரவாக கடிதம் அளிக்க சொல்லுங்கள்' என்றும் தி.மு.க., - எம்.பி.,க்களிடம் சொல்லி வருகிறார், அகிலேஷ் யாதவ்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X