87வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

Updated : ஜன 30, 2022 | Added : ஜன 30, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 87 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 87 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.



latest tamil news


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, இரண்டும் லிட்டருக்கு தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.



குறிப்பாக, டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர். தமிழகத்தில் கடந்த ஆண்டு நவ., மாதம் 3ம் தேதி லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய்க்கும்; டீசல் 102.59 ரூபாய்க்கும் விற்பனையானது.



latest tamil news


அடுத்த நாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய அரசு, 3ம் தேதி இரவு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டது. இதனால், 4ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைந்தது.



அன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும்; டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாயின. இன்று (ஜன.,30) வரை 87 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜன-202215:28:50 IST Report Abuse
பாமரன் ...🤔😩
Rate this:
Cancel
Ramaswami Sampath - mumbai,இந்தியா
30-ஜன-202214:30:31 IST Report Abuse
Ramaswami Sampath சர்வ தேச சந்தைக்கு கூட தெரியும் போல் இருக்கிறது பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்துக்கு காரணம் சர்வ தேச சந்தையில் கச்சா என்னை விலை ஏற்றம் தான் என்று கூறி மக்களை முட்டாளாக்கி வந்தது அரசு. 87 நாட்களாக ஏன் விலை ஏறவில்லை? உ.பி மக்கள் வரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
30-ஜன-202214:00:52 IST Report Abuse
nizamudin எல்லா தேர்தலுக்கு பிறகு ஒரேயாடியஆ விலை எதுவங்க ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X