எக்ஸ்குளுசிவ் செய்தி

அண்ணாமலை அதிரடிக்கு காரணம் என்ன?

Updated : ஜன 31, 2022 | Added : ஜன 31, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை :நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 'சீட்' பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அ.தி.மு.க. - பா.ஜ. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இரு கட்சி தலைமையும் தங்கள் நிலையில் உறுதியாக இருந்ததே உடன்பாடு தோல்வியில் முடிந்ததற்கு காரணம்.ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகள்இடையே கூட்டணி தொடர்ந்தபோதும் சில மாவட்டங்களில் 'சீட்' பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது. அந்த
அண்ணாமலை முடிவு , காரணம் என்ன ?

சென்னை :நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 'சீட்' பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அ.தி.மு.க. - பா.ஜ. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

இரு கட்சி தலைமையும் தங்கள் நிலையில் உறுதியாக இருந்ததே உடன்பாடு தோல்வியில் முடிந்ததற்கு காரணம்.ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகள்இடையே கூட்டணி தொடர்ந்தபோதும் சில மாவட்டங்களில் 'சீட்' பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது. அந்த மாவட்டங்களில் மட்டும் பா.ஜ. தனித்து போட்டியிட்டது. அந்த நிலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வரக் கூடாது என்பதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இரு கட்சி தலைமையும் நேரடியாக பேச முடிவு செய்தன.அதன்படி ஜன. 29ம் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பேச்சு நடந்தது.


இரு தரப்பினரும் நான்கு மணி நேரம் பேசியும் உடன்பாடு எட்டப்படவில்லை. பா.ஜ. தரப்பில் சில மாவட்டங்களில் 30 சதவீத இடங்கள் கேட்கப்பட்டுஉள்ளது; அ.தி.மு.க. ஏற்கவில்லை. பா.ஜ. தரப்பில் நகர்ப்புறங்களில் தங்கள் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதால் அதிக இடங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.அ.தி.மு.க. தரப்பில்'பல நகரங்களில் பா.ஜ.,வுக்கு கிளைகளே இல்லை' என கூறியதுடன் அது தொடர்பான விபரங்களையும் எடுத்து வைத்தனர். அதை ஏற்க பா.ஜ. தரப்பு மறுத்துள்ளது.

அப்போது அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி 'போட்டியிட்டால் வெற்றி பெற வேண்டும்' என கிண்டலாக கூற 'வெற்றி பெறத் தானே போட்டியிடுகிறோம்' என அண்ணாமலை சூடாக பதில் கூறியுள்ளார்.அதேபோல் கோவையில் அதிக இடங்களை கேட்டதற்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி 'சட்டசபை தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்ற தொகுதியிலே கூட தற்போது அதிக வார்டுகளில் வெற்றி பெற முடியாது' என கூறி உள்ளார்.

சென்னை மாநகராட்சியில் தென் சென்னை பகுதியில் அதிக வார்டுகளை பா.ஜ. கேட்டுள்ளது. தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்காது எனக் கருதும் வார்டுகளை மட்டும் பா.ஜ.வுக்கு தள்ளவிட அ.தி.மு.க. முன் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பா.ஜ.வுக்கு அதிக வார்டுகளை வழங்க அ.தி.மு.க. தலைமை சம்மதம் தெரிவித்துஉள்ளது.


மத்திய மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும்குறைவான இடங்களையே வழங்க முடியும் எனக் கூற பா.ஜ., தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். நேற்று முன்தினம் இரு தரப்பிலும் தொலைபேசி வழியே பேச்சு நடந்தது. ஆனால் பா.ஜ. அதிக இடங்களைப் பெறுவதில் உறுதியாக இருந்தது. அ.தி.மு.க. தலைமையோ அதிக இடங்களை வழங்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தது. இதன் காரணமாக உடன்பாடு எட்டப்படவில்லை. பா.ஜ. தனித்து போட்டியிட முடிவு
செய்தது; அதை அ.தி.மு.க.வும் ஆமோதித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran K - Hosur,இந்தியா
01-பிப்-202216:39:53 IST Report Abuse
Ravichandran K BJP கூட்டணியில் இல்லாததால் மைனாரிடி வாக்குகள் பிரிந்து அதிமுக சாதகமாகுமோ?
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
02-பிப்-202206:37:43 IST Report Abuse
sankarஜெயலலிதாவுக்கு விழுந்த இந்து வாக்குகள் பிஜேபிக்கு பொய் விடும்...
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
01-பிப்-202213:41:46 IST Report Abuse
Venugopal S சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதை தான்
Rate this:
Cancel
MSR - Blr,இந்தியா
01-பிப்-202213:11:59 IST Report Abuse
MSR could have settled for 12-13% and retained the coalition. It is not a smart move and the party will have to answer questions after the debacle.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X