இது உங்கள் இடம்: தமிழில் பெயரை மாற்றுவாரா ஸ்டாலின்?

Updated : பிப் 01, 2022 | Added : பிப் 01, 2022 | கருத்துகள் (130) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்எஸ்.ட்டி.ஸ்ரீனிவாஸன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரஷ்யாவில் அதிபராக இருந்த ஸ்டாலின் இறந்த போது, சென்னை கடற்கரையில், தி.மு.க., சார்பில் இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், கருணாநிதியிடம் ஒரு துண்டு சீட்டு கொடுக்கப்பட்டது.அதில், 'உங்களுக்கு


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
latest tamil news


எஸ்.ட்டி.ஸ்ரீனிவாஸன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரஷ்யாவில் அதிபராக இருந்த ஸ்டாலின் இறந்த போது, சென்னை கடற்கரையில், தி.மு.க., சார்பில் இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், கருணாநிதியிடம் ஒரு துண்டு சீட்டு கொடுக்கப்பட்டது.அதில், 'உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்து பார்த்த கருணாநிதி, அங்கேயே, 'எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்; அவனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுகிறேன்' என்று அறிவித்தார் என, சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாக செய்திகள் வெளியாகின.latest tamil news


முதல்வர் ஸ்டாலின் பிறந்த தேதியோ 1 - 3 - 1953. முந்தைய சோவியத் யூனியன் அதாவது தற்போதைய ரஷ்யாவின் அதிபராக இருந்த ஜோசன் ஸ்டாலின் இறந்த தேதியோ, 5 - 3 - 1953. இந்த ஸ்டாலின் பிறந்து நான்கு நாட்கள் கழித்து தான், ரஷ்ய ஸ்டாலின் இறந்திருக்கிறார். பின் எப்படி இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி பெயர் வைத்தார் என்பது முரண்படுகிறது.போகட்டும்... பெரிதுபடுத்த வேண்டாம். தமிழ் மொழி பற்றியும், துாய தமிழிலேயே தொண்டர்கள் பெயர் சூட்ட வேண்டும் என்றும், முதல்வர் ஸ்டாலின் சொல்லும் அலப்பறையைத் தான் தாங்க முடியவில்லை. திராவிடம், உதயசூரியன், இவர்கள் நடத்தும் பள்ளிகள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் என ஒன்றின் பெயர் கூட தமிழில் இல்லையே.தமிழில் பெயர் வைக்கக் கூறும், முதல்வர் புத்திரனின் பெயர் மட்டும் என்னவாம்! உதயநிதி. உதயம் என்பதும், நிதி என்பதும் சமஸ்கிருத வார்த்தைகளே. துாய தமிழ் பெயரை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும், முதல்வர் ஸ்டாலின், தன் பெயரை துாய தமிழில் மாற்றிக் கொள்ளலாமே.இது ஒன்றும் கடினமல்லவே; இவரது தமிழ்ப்பற்று போலியானது. பெயரை மாற்றினால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற திராவிட பகுத்தறிவு. பிராமணரான ஸுரிய நாராயண ஸாஸ்த்ரியார், தமிழின் மீதான உண்மையான பக்தியால், பரிதிமாற் கலைஞர் என்று மாற்றி வைத்து கொண்டார். எனவே, ஊருக்கு உபதேசம் செய்யும் முதல்வர் ஸ்டாலினும், அதேபோல தன் பெயரை துாய தமிழில் வைத்துக் கொண்டு, தொண்டர்களுக்கு முன் உதாரணமாக திகழலாமே!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - chennai,இந்தியா
06-பிப்-202207:30:53 IST Report Abuse
ravi கருணாநிதி மனித குலத்திற்கே இழுக்கானவர்.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
03-பிப்-202210:40:26 IST Report Abuse
sridhar மௌனம்... .
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
02-பிப்-202213:51:18 IST Report Abuse
nizamudin அட
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X