மானம், மரியாதையை இழக்க தயாரில்லை

Added : பிப் 02, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
திருநெல்வேலி:''எங்கள் மானம், மரியாதையை இழந்து குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட மாட்டோம்,'' என திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் ஆவேசமாக தெரிவித்தார்.திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சீட்டுகள் மட்டுமே தி.மு.க., ஒதுக்கியுள்ளது. மற்ற கட்சிகளுக்கும் தலா ஒரு சீட்டு மட்டும் ஒதுக்கியுள்ளது. இது குறித்து
 மானம், மரியாதையை இழக்க தயாரில்லை

திருநெல்வேலி:''எங்கள் மானம், மரியாதையை இழந்து குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட மாட்டோம்,'' என திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் ஆவேசமாக தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சீட்டுகள் மட்டுமே தி.மு.க., ஒதுக்கியுள்ளது. மற்ற கட்சிகளுக்கும் தலா ஒரு சீட்டு மட்டும் ஒதுக்கியுள்ளது.


இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. அவர் கூறியதாவது, தமிழகத்தில் தி.மு.க., வெற்றிக்கு காங்கிரஸ் பாடுபட்டுள்ளது. மாநகராட்சி 55 வார்டுகளில் ஒரு மண்டலத்துக்கு இரண்டு வார்டுகள் வீதம் 8 வார்டுகள் கேட்டிருந்தோம். ஆனால் தற்போது மூன்று வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.


மானம் மரியாதையை இழந்து இத்தகைய குறைவான எண்ணிக்கையில் போட்டியிட மாட்டோம். துண்டு போனால் பரவாயில்லை. வேட்டியையே பறிக்கிறார்கள். ஒதுக்கப்பட்ட மூன்றும் பெண்கள் வார்டுகள். ஏன் காங்கிரஸ் கட்சியில் ஆண்களே இல்லையா. 26 வார்டுகளில் போட்டியிட கட்சியினர் ஆர்வமாக உள்ளனர். தனித்துப் போட்டியிடுவோம்.


இதுகுறித்து மாநில தலைமைக்கு தெரிவித்துள்ளோம். தனித்துப் போட்டியிட கட்சி தலைமை அனுமதிக்காவிட்டால், எங்களுக்கு சீட் எதுவும் தேவையில்லை தோழமை கட்சி என்ற முறையில் எங்கும் போட்டியிடாமல் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
08-பிப்-202206:39:59 IST Report Abuse
NicoleThomson என்னது ? இப்படி ஒரு தமிழனா , ராகுல் காதுக்கு இது சென்றால் நீங்க கட்சியில் இருக்க மாட்டீங்க அய்யா , என்று ராகுல் குடும்பம் அந்த கட்சியை விட்டு தூக்கி எறியப்படுகிறதோ அன்று தான் காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்புண்டு
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
03-பிப்-202218:21:49 IST Report Abuse
Godyes ஏம்பா நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் யார் என தெரிந்தும் இன்னுமா கூட்டு வைக்கிறீர்கள்.
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
03-பிப்-202213:55:53 IST Report Abuse
abibabegum எங்கள் மானம், மரியாதையை இழந்து குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட மாட்டோம்,'' என திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். மானம் இருந்தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X