வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய அரசின் உதவி கிடைக்காமல் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நசிந்துவிட்டதாக பார்லி. லோக்சபாவில் காங்., எம்.பி., ராகுல் பேசினார்.
பார்லி.பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் போது, லோக்சபாவில் காங்., எம்.பி.,. ராகுல் பேசியதாவது,
* ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் கிடைக்க மத்திய பட்ஜெட்டில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
![]()
|
* மத்திய அரசின் உதவி கிடைக்காமல், சிறு குறு தொழில்கள் நசிந்துள்ளன. சிறு. குறு தொழில்களை மத்திய அரசு மொத்தமாக அழித்துவிட்டது.
* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்காமல், 'மேக் இன் இந்தியா' திட்டம் வெற்றி பெறாது
* பணக்காரர்கள், பெரு நிறுவனங்களுக்கு தான் மத்திய அரசின் சலுகைகள் கிடைக்கின்றன.
* இன்று இரண்டு இந்தியா உள்ளன, ஒன்று பணக்காரர்களுக்கு, மற்றொன்று ஏழைகளுக்கு .
* முந்தைய காங். தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 10 ஆண்டு ஆட்சியில் 27 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டனர். தற்போதைய அரசு 23 கோடி மக்களை வறுமையில் தள்ளியுள்ளது.
* பிரதமர் மோடி ஆட்சியில் 23 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.
* பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு உரிய பதில் அளிக்கவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.