பயணிகளின் கனிவான கவனத்திற்கு!

Added : ஆக 15, 2011
Share
Advertisement
தமிழகத்தின் மக்கள்தொகை 7.2 கோடி, அதில் சென்னையின் மக்கள் தொகை மட்டும் சுமார் 70 லட்சம் . 1639ம் ஆண்டு சென்னையில் மக்கள் தொகை வெறும் 40,000 ஆக இருந்தது. ஆனால் இன்று மக்கள் தொகை 70 லட்சமாக அதிகரித்துள்ளது. இது தவிர அன்றாடம் சென்னைக்கு வெளியூர்களில் , வெளி மாநிலங்களில் இருந்து வர்த்தக ரீதியாக , மருத்துவ வசதிகளை பெற, இன்னும் பல்வேறு காரணங்களுக்காகவும் எண்ணில் அடங்காதவர்கள் வந்து


தமிழகத்தின் மக்கள்தொகை 7.2 கோடி, அதில் சென்னையின் மக்கள் தொகை மட்டும் சுமார் 70 லட்சம் . 1639ம் ஆண்டு சென்னையில் மக்கள் தொகை வெறும் 40,000 ஆக இருந்தது. ஆனால் இன்று மக்கள் தொகை 70 லட்சமாக அதிகரித்துள்ளது. இது தவிர அன்றாடம் சென்னைக்கு வெளியூர்களில் , வெளி மாநிலங்களில் இருந்து வர்த்தக ரீதியாக , மருத்துவ வசதிகளை பெற, இன்னும் பல்வேறு காரணங்களுக்காகவும் எண்ணில் அடங்காதவர்கள் வந்து செல்கின்றனர். இதனாலேயே சென்னை எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

இவ்வளவு ஜனங்களுக்கும் போக்குவரத்து வசதி செய்து தருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. சென்னையில் காலை நேரத்தில் பீக் ஹவர் ( 8 மணி முதல் 10 மணி வரை ) பஸ் ஸ்டாண்டுகளில் விழி பிதுங்க வைக்கும் அளவிற்கு கூட்டம், ரயில்வே ஸ்டேஷனிலும் திணற வைக்கும் அளவுக்கு நெரிசல். சாதாரண பஸ்கள், விரைவுப் பேருந்துகள், ஏ.சி., பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள், மேக்சி கேப்கள், புறநகர் மின்சார ரயில்கள் என இத்தனை இருந்தாலும் மக்களின் அன்றாட போக்குவரத்து கஷ்டமாகத்தான் இருக்கிறது. வாகன நெரிசல் ஒரு பக்கம் என்றால் டிராபிக் ஜாம் மற்றொரு பக்கம் பயணிகளை பாடாய் படுத்துகிறது. குறித்த நேரத்தில் இலக்கை அடைய முடிவதில்லை. இதற்காக பிளை ஓவர்கள், மேம்பாலங்கள், ஓவர் பிரிட்ஜ்களும் கட்டப்பட்டாகிவிட்டது. இதற்கு மேலாகவும் போக்குவரத்து சுலபமாக்கவும், பயணத்தை லகுவாக்கவும் என்ன செய்யலாம் என யோசித்த போது முளைத்தது தான் மும்பை, டில்லி, கோல்கட்டா போன்ற மற்ற பெருநகரங்களில் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டம்.

மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் முதல்கட்டமாக இரண்டு பாதைகளில் அமைக்க திட்டம் தீட்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒன்று வண்ணாரப்பேட்டையிலிருந்து பிராட்வே, ஸ்பென்சர்ஸ், அண்ணாசாலை, கிண்டி வழியே சென்னை விமான நிலையத்திற்கும் (23.1 கிமீ); மற்றொன்று சென்னை சென்ட்ரலில் இருந்து வேப்பேரி, அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, பரங்கிமலை ( 22 கி மீ) வரையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டுமே தலா 18 நிலையங்கள் உள்ளவாறு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் வன்னாரப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை வரை தரைக்கு கீழேயும் பிறகு விமான நிலையம் வரை தூண்களுக்கு மேலேயும் செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை தரைக்கு கீழேயும் பிறகு பரங்கிமலை வரை தூண்களுக்கு மேலேயும் செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது. தரைக்கு கீழ் உள்ள நிலையங்கள் முழுதும் குளிரூடப்பட்டவைகளாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது .

மெட்ரோ ரயில் கட்டணம் வசூலிப்பதற்கும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படயிருக்கின்றன. குறைந்தபட்ச தூரமான 2 கி.மீ., க்கு ரூ 8ம், அதிகபட்ச தூரமான 27கி.மீ., க்கு ரூ.23ம் வசூலிக்கலாம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் நிறைவேறவுள்ள இந்த திட்டத்துக்கு ஆதரவும் இருக்கிறது, அதே வேளையில் இயற்கை ஆர்வலர்கள், பாரம்பரிய பாதுகாவலர்கள் ஆகியோரிடம் இருந்து எதிர்ப்பும் இருந்து வருகிறது.

மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, மக்கள் தொகை நெரிசலை சமாளிக்க நவீன போக்குவரத்து வசதிகள் தேவை என்பதில் எதிர்பாளர்களுக்கு எந்த வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் அதற்காக வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்று கூறி விட்டு, பல இடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மரங்களை வெட்டி சாய்ப்பது சரியா என்றும், சென்னை நகருக்கே அடையாளமாக விளங்கும் சில முக்கிய வரலாற்று சின்னங்கள், கட்டடங்கள் ஆகியனவற்றின் புகழ் மறையும் அளவிற்கும் ரயில் பாலங்களை அமைக்க வேண்டுமா என்பதே அவர்கள் கேள்வியாக இருக்கிறது.

சென்னைக்குப் புதிததாக வருபவர்கள் யாராக இருந்தாலும் , அவர்களுக்கு ரிப்பன் பில்டிங்கையும், விக்டோரியா மெம்மோரியல் ஹாலையும் லேசாக எட்டிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ரி்ப்பன் பில்டிங்கை சில நூறு கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ரிப்பன் பில்டிங் முகப்பில் இருக்கும் தோட்ட வளாகத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக விட்டுத்தருமாறு மெட்ரோ ரயில் அதிகாரிகள் சிலர் அரசுத்துறையை அணுகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர பல தனியார் கம்பெனிகளும் மெட்ரோ ரயில் திட்டம் முழுமையடைந்த பிறகு, தங்கள் அடையாளங்களை இழக்கும் நிலை ஏற்படக்கூடம். மவுன்ட் ரோடு மார்க்கத்தில், சிம்பசன் அண்டு கம்பெனி, பி.ஆர் அண்டு சன்ஸ், பூம்புகார், இந்தியா சில்க் ஹவுஸ், பாடா டி ஏஞ்சலிஸ், காஸ்மோபாலிட்டன் கிளப், பாரத் இன்சூரன்ஸ் பில்டிங் ஆகியன பாதிக்கப்படும் என்பதே பாரம்பரிய பாதுகாவலர்களின் வருத்தம்.

இயற்கை ஆர்வலர்களோ, வளர்ந்து, செழிப்பாக இருக்கும் மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்படுகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் இத்திட்டத்தை நிறைவேற்றக்கூடாதோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். சுற்றுப்புறச்சூழலில் மெட்ரோ ரயில் திட்டம் ஏற்படத்துக்கூடிய பாதிப்பு பற்றிய வாதம்,விவாதங்கள் ஓயாத அலையாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

சென்னையில் அமைக்கப்பட்டு வருவது போல், பெங்களூருவிலும் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையைப் போல் அல்லாது பெங்களூருவில், மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாக தூண்களுக்கு மேலாகவே அமைக்கப்படுகிறது. பெங்களுருவின் பிரபலமான காந்தி ரோடு பகுதியில் மெட்ரோ ரயில் ஸ்டெஷன்க் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மெட்ரோ ரயில் ஸ்டேஷன் அமைப்பானது அதனை சுற்றியிருக்கும் பகுதிகளுக்கு சூரிய வெளிச்சம் செல்லமுடியாத படியும், போதிய காற்று வசதி இல்லாத அளவிற்கும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் சுற்றுவட்டார குடியிருப்புவாசிகளும், வர்த்தக நிறுவனங்களும் பல்வேறு நடைமுறைச் சங்கடங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். இதே போல் மழை பெய்தால், அந்த நீரை வெளியேற்ற பிரத்யேக ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை, எனவே மழை நீர் வடிந்து கீழே செல்லும் சாலையில் தேங்கும். இந்தச் சூழல் வர்த்தக ரீதியாக புகழ்பெற்று திகழும் காந்திநகருக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஒரு நேரடி ஆய்வறிக்கை. இதை கருத்தில் கொண்டு சென்னையில் பாரம்பரியத்தை காப்பாற்ற நினைக்கும் ஆர்வலர்கள் கேட்கும் கேள்வி ஒன்று தான், இதே பாணியில் தான் சென்னை மெட்ரோ ரயில் திட்டமும் அமைக்கப்படுமா இல்லை சென்னையில் அதிக கவனத்தோடு, மேம்படுத்தப்பட்ட திட்டம் செயல்படுத்தப்படுமா என்பது தான்.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அண்டர் கிரவுண்டில் தான் அமைக்கப்படுகிறது. அண்டர்கிரவுண்டில் ரயில் தடங்கள் அமைக்கப்படும் போது மிகப் பெரிய அளவில் சுரங்கங்கள் தோண்டப்பட வேண்டியிருக்கிறது. பிரமாண்ட சுரங்கங்கள் தோண்டுவதால், அருகில் இருக்கும் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. மவுன்ட் ரோடு மார்க்கத்தில் அதிக புராதண சின்னங்கள் இருப்பதாகவும், அப்பகுதியில் தான் சுரங்கங்களும் அமைக்கப்பட்டு வருவதாகவும் அக்கறை தெரிவித்து உள்ளனர் பாரம்பரியப் பாதுகாவலர்கள்.

மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி்கள் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், பாரம்பரியப் பாதுகாவலர்கள் என பல்வேறு துறையினரிடமும் பொதுவான கருத்து கேட்பு நடத்தி திட்டத்தை இன்னும் மேம்படுத்தப்பட்ட வகையில் செயல்பபடுத்தலாம் என்பதே எதிர்பார்ப்பு. எல்லாம் சரியாக அமைந்தால், யாவரும் நலமாக புதிய பாதையில் பயணிக்கலாம். மெட்ரோ ரயில் திட்டத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்த ஆரம்பித்தால் இருசக்கர, நான்கு சக்கர வாகன நெரிசல் கணிசமாக குறையும் என்பது மறுக்கப்பட முடியாத ஒன்று.


Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X