வாஷிங்டன் ;மேற்காசிய நாடான சிரியாவில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க, சிரியா ராணுவத்துடன் இணைந்து, அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.நேற்று முன்தினம் வடமேற்கு சிரியாவின் அட்மேஹ் பகுதியில், அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இதில், ஆறு குழந்தைகள் உட்பட,13 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று கூறியதாவது:சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தின. இதில் ஐ.எஸ்., தலைவர் அபு இப்ராகிம் அல் ஹஷ்மி அல் குரேஷி கொல்லப்பட்டார்.
![]()
|
இவ்வாறு பைடன் கூறினார்.இதற்கிடையே, அமெரிக்க தாக்குதலுக்கு பயந்து, ஐ.எஸ்., தலைவர் குரேஷி, வெடிகுண்டை தானே வெடிக்கச் செய்து, தன் குடும்பத்தினருடன் சேர்ந்து பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.