வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி : ''எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், கவர்னர்கள் மத்திய அரசின் ஒற்றர்களாக செயல்படுகின்றனர்,'' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டமாக கூறினார்.
அவர் நேற்று அளித்த பேட்டி: நீட் தேர்வு விலக்கு அளிக்க, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்ட சட்ட வரையறையை, கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்க வேண்டும். அதை செய்யாமல் பல மாதம் வைத்திருந்தது தவறு.கவர்னருக்கு சட்ட வரையறையை திருப்பி அனுப்பும் அதிகாரம் உள்ளது என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை கருத்தை வெளியிட்டுள்ளார்.

மாநிலங்களை பொருத்த வரை, ஒரு சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றினால், கவர்னர் விளக்கம் கேட்கலாமே தவிர, திருப்பி அனுப்ப கூடாது.சட்டம் தொடர்பாக விளக்கம் கேட்டு, ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டியது கவர்னரின் கடமை. அதை தமிழக கவர்னர் மீறியுள்ளார்.
மத்தியில் பா.ஜ., ஆட்சி வந்த பின், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கவர்னர்கள், மத்திய அரசின் ஏஜென்டுகளாக, ஒற்றர்களாக செயல்படுகின்றனர். அது தற்போது தெளிவாக தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.