'மத மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ஹிந்து அமைப்பினர் மீது பொய் வழக்கு'

Updated : பிப் 05, 2022 | Added : பிப் 05, 2022 | கருத்துகள் (91) | |
Advertisement
சென்னை : ''கிறிஸ்துவர்களின் மத மாற்ற பிரசாரம் குறித்து கேள்வி எழுப்பும் ஹிந்து நிர்வாகிகள் மீது, போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்கின்றனர்,'' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாநில செயலர் ராஜேந்திரன் குற்றம் சாட்டினார்.சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஜன., 21ல், புதுக்கோட்டை மாவட்டம், திம்மையம்பட்டி கிராமத்தில், கர்ப்பிணிக்கு பிரார்த்தனை செய்வது போல,
RSS, Hindu, fake complaint

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ''கிறிஸ்துவர்களின் மத மாற்ற பிரசாரம் குறித்து கேள்வி எழுப்பும் ஹிந்து நிர்வாகிகள் மீது, போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்கின்றனர்,'' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாநில செயலர் ராஜேந்திரன் குற்றம் சாட்டினார்.



சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஜன., 21ல், புதுக்கோட்டை மாவட்டம், திம்மையம்பட்டி கிராமத்தில், கர்ப்பிணிக்கு பிரார்த்தனை செய்வது போல, கன்னியாஸ்திரிகள் இருவர், மத மாற்ற முயற்சியில் ஈடுபட்டனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியைச் சேர்ந்த ஹிந்து அமைப்பு நிர்வாகி கணேஷ்பாபு, போலீசில் புகார் அளித்தார்; நடவடிக்கை இல்லை. ஆனால், தாங்கள் தாக்கப்பட்டதாக, அப்பெண்கள் அளித்த புகாரில், கணேஷ் பாபு நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.



latest tamil news


அதேபோல, மதுரையில், தெற்கு மாசி வீதி பகுதியில், வீடு வாடகைக்கு எடுத்து பிரார்த்தனை என்ற பெயரில், ஹிந்துக்களை, கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வர தாமதம் ஆனதால், ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் ஆறு பேர், மத மாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக, மதுரை மாவட்ட ஹிந்து அமைப்பு நிர்வாகி ராசாக்கண்ணு உள்ளிட்ட ஆறு பேரை, நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் கைது செய்துள்ளனர்.



மத மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கும், ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மீது, போலீசார் பொய் வழக்குப் போட்டு கைது செய்து, சிறையில் அடைக்கும் போக்கு நீடித்து வருகிறது. கன்னியாகுமரியில், ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரியார், 'கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சையால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது. இனி, நாங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும்' என பேசியுள்ளார். அதுபோலவே, மத மாற்ற பிரசாரம் நடந்து வருகிறது.



கிறிஸ்துவர்களின் மதவெறி பேச்சுக்களும், மோசடி மதமாற்ற நடவடிக்கைகளும், தமிழகத்தில் மதப்பூசல்களை, மத சச்சரவுகளை உருவாக்கும் சர்வதேச சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. முதல்வர் ஸ்டாலின், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்வதுடன், அந்த குடும்பத்தினரிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
06-பிப்-202200:32:52 IST Report Abuse
Vijay D Ratnam ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் மாஃபியா கூட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் கூட்டணிக்கு மானமுள்ள ஹிந்துக்கள் நாங்கள் வாக்களிக்கமாட்டோம் என்று முடிவு செய்து வாக்களித்தால் போதும். மைனாரிட்டி அரசியல் என்ற பச்சை அரசியல் அயோக்கியத்தனம் முடிவுக்கு வந்துவிடும்.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
05-பிப்-202216:14:39 IST Report Abuse
Samathuvan அம்பேத்காரின் ஆசிரியர் பெயர் அம்பேத்கர், அப்பொழுது அவர் பிராமணமனிதர் என்பதால் மராத்திய அரசுக்கு சிபாரிசும் செய்து அம்பேத்கரை மேற்படிப்புக்கு செல்லவும் உதவி செய்தார். மேலும் அவர் இந்த மனுதர்மத்தில் உடன்பாடு இல்லாதவர்.
Rate this:
Cancel
05-பிப்-202215:41:05 IST Report Abuse
பேசும் தமிழன் விடியல் ஆட்சியில்... இது எல்லாம் சர்வசாதாரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X