நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவோம்: சுகாதார துறை அமைச்சர்

Updated : பிப் 06, 2022 | Added : பிப் 05, 2022 | கருத்துகள் (68) | |
Advertisement
சென்னை: நீட் தேர்வில் விலக்கு கோரும் விவகாரத்தில் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி ஒரு மனதாக நிறைவேற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மாணவர்களின் நலன்
நீட் தேர்வு, மருத்துவ கல்வி, மா.சுப்பிரமணியன், மா.சு,  அனைத்து கட்சி கூட்டம்,

சென்னை: நீட் தேர்வில் விலக்கு கோரும் விவகாரத்தில் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி ஒரு மனதாக நிறைவேற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
மாணவர்களின் நலன் கருதியும், மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்கவும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே ஒரே தீர்வு. நீட் தேர்வு விவகாரத்தில் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி, கவர்னர் தெரிவித்த கருத்துகள், அவர் கேட்ட விளக்கங்கள் குறித்து தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை தெரிவித்து சட்ட மசோதாவை மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலை பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


latest tamil news



கூட்டத்தில், பங்கேற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய., கம்யூ., மனித நேய மக்கள் கட்சி, பா.ம.க., உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தீர்மானத்தை வரவேற்று ஒரு மனதாக நிறைவேற்றி தந்துள்ளனர்.

சட்டசபை கூட்டத்திற்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்டசபை கூட்டம் குறித்த அறிவிப்பு சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும். நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கவர்னர் திருப்பி அனுப்பியதாக வரலாறு இல்லை. எனவே, விதிகளின் அடிப்படையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கே அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-பிப்-202217:23:43 IST Report Abuse
பேசும் தமிழன் கவர்னர் தான் தெளிவாக சொல்லி விட்டாரே...மருத்துவ கல்லூரி இடங்கள்... 50 இலட்சம் 60 இலட்சம்... ஏன் கோடிகளில் கூட விற்பனை செய்யப்பட்டு வந்தது... நீட் தேர்வு மூலம்.... அது தடுக்கப்பட்டு... எந்த பணமும் செலுத்தாமல்... ஏழை அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறுவதை இவர்களால் பொருத்து கொள்ள முடியவில்லை..அது தான் உண்மை
Rate this:
Cancel
06-பிப்-202207:37:54 IST Report Abuse
சி சொர்ணரதி அய்யா அறிவாளிகளே! கவர்னர் தீர்மானத்தை திருப்பி அனுப்பியது 01.02.2022 அன்று.கவர்னர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளிவருகின்ற வரை நீங்க ஏன் தீர்மானத்தை திருப்பி அனுப்பிவிட்டார் என்று ஏன் கூறவில்லை. கவர்னராக அறிவிக்கை வெளியீடும் வரை ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்று கூற முடியுமா?அவர் பதிலை வெளியீட்டு விட்டால் உங்களுடைய குட்டு வெளிப்பட்டு விடும் என்று தானே சொல்லவில்லை.நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது என்பதை எந்த அதிகாரியும் உங்களிடம் கூறவில்லையா இல்லை அப்படியே கூறினாலும் அதை நீங்கள் கேட்கவில்லையா?தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் என்றுமே முன்னேற கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கின்ற மாதிரி தெரிகிறது.அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நீட் தேர்வில் வெற்றி பெற்று காட்டி உள்ளனரே, அந்த வெற்றிகள் எல்லாம் உங்கள் கவனத்தில் வரவில்லையா இல்லை வந்தும் மறைக்கின்றீர்களா?.
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-202205:26:33 IST Report Abuse
ram ஏன் உனக்கு எத்தனை மருத்துவக்கல்லூரி இருக்கு.. உன்னோட வருமாணம் மொத்தமா போயிருச்சோ.. இதுலே வேற சுகாதாரத்துறை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X