இந்திய இசைக்குயில் மவுனமானது: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

Updated : பிப் 06, 2022 | Added : பிப் 06, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
மும்பை: இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடிய இசைக்குயில் லதா மங்கேஷ்கர் ( இன்று பிப்-6 ) காலாமானார். கோவிட் பாதிப்பில் இருந்து அவரது உயிர் மும்பை மருத்துவமனையில் பிரிந்தது. அவருக்கு வயது 92.மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடிய இசைக்குயில் லதா மங்கேஷ்கர் ( இன்று பிப்-6 ) காலாமானார். கோவிட் பாதிப்பில் இருந்து அவரது உயிர் மும்பை மருத்துவமனையில் பிரிந்தது. அவருக்கு வயது 92.latest tamil newsஇந்திய இசைக்குயில் மவுனமானது லதா மங்கேஷ்கர் 28.09.1929 - 06.02.2022 | Singer Latha Mangeshkar | Dinamalar |

மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க கடந்த ஜன., 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் மூலம் சுவாசித்து வந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.


latest tamil news


ஆனால் நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இன்று காலை லதா மங்கேஷ்கர் காலமானார். பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால், அவர் காலமானதாக, சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அவரது உடல் பிற்பகல் 12:30 மணிக்கு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.மாலை 6:30 மணியளவில் சிவாஜி பூங்காவில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

இதனிடையே, லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நாடு முழுவதும் இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.V.K.SRIRAM - chennai,இந்தியா
06-பிப்-202219:47:37 IST Report Abuse
K.V.K.SRIRAM இந்திய இசைக்குயில் மறைவு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி.
Rate this:
Cancel
Senthil kumar - coimbatore,இந்தியா
06-பிப்-202219:14:14 IST Report Abuse
Senthil kumar இசை குயிலின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்...
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-பிப்-202216:51:14 IST Report Abuse
மலரின் மகள் இசைக்குயில் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துவிட்டபடியால் மனதிற்குள் இசைக்கிறது. தேசத்திற்கு பெருமை சேர்த்தவர். பாரத்தத்தின் ரத்தினம். நமது தேசத்த்தின் ஏறத்தாழ அனைத்து மொழிகளிலும் இசைத்த குரல். தமிழில் பேசிய மொழிகள் இன்றும் மழலையாய் யு டியூப் சேல்களில் கேட்கமுடிகிறது. ஒரு இசைக்கச்சேரியில் தமிழிலேயே பேசியதை கேட்டு ரசித்தவர்கள் ஏறலாம். என்பது வயதை கடந்தவர்களை கடவுளுக்கு ஒப்பானவர்களாக சொல்வார்கள். விருப்பு வேறுதிப்புற்று தனக்கென்று எதுவும் பாராமல் உலக செமத்திற்காக பிரார்த்திக்கும் மணமுடியவர்களாக இருப்பார்கள் அவர்கள். தொண்ணூறை கடந்தும் வாழ்வது இறைவன் அளித்தவரம். இன்று மிக சிறந்த நன்னாள். நிறைய கோவில்களில் சிவாலயங்களில் வருடாபிஷேகம் நடக்கும் நாள். உத்திராயணம் துவங்கி மாத காலம் நடந்து கொண்டிருக்கும் நாள். சிறந்த ஆத்மா கயிலாயம் செல்கிறது. வருந்துவதற்கு எதுவுமில்லை. போற்றத்தக்கவர். போற்றுவோம். கயிலாயம் அடையட்டும் நமது இந்தியாவின் இசைக்குயிலின் ஆத்மா. ஓம் சாந்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X