'நீட்' தேர்வில் இரட்டை வேடம் ஏன்? தி.மு.க.,வுக்கு பா.ஜ., கேள்வி!

Updated : பிப் 07, 2022 | Added : பிப் 07, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
கோவை- ''நீட் -தேர்வு பா.ஜ., அரசு கொண்டு வந்ததல்ல என தெரிந்தும், லோக்சபாவில் பா.ஜ.,வுக்கு எதிராக தி.மு.க., - எம்.பி.,க்கள் கோஷம் போடுவது அநாகரிகம்' என, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிட்டி பரிந்துரையில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பிய தி.மு.க., அரசு, ஏன் உச்ச நீதிமன்றத்தில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை- ''நீட் -தேர்வு பா.ஜ., அரசு கொண்டு வந்ததல்ல என தெரிந்தும், லோக்சபாவில் பா.ஜ.,வுக்கு எதிராக தி.மு.க., - எம்.பி.,க்கள் கோஷம் போடுவது அநாகரிகம்' என, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.



latest tamil news


அவரது அறிக்கை: நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிட்டி பரிந்துரையில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பிய தி.மு.க., அரசு, ஏன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடவில்லை? அப்படி வழக்கு போட்டால் அது நிராகரிக்கப்படும் என, தி.மு.க.,வுக்கு தெரியும்.மத்திய அமைச்சர்'நீட்' தேர்வு, தி.மு.க., அங்கம் வகித்த காங்., ஆட்சி காலத்தில், காந்தி செல்வன் மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது.



அப்போது தி.மு.க., ஏன் எதிர்க்கவில்லை? நீட் தேர்வை கொண்டு வந்த அதே காங்கிரசுடன், இன்னும் கூட்டணியில் கைகோர்த்து கொண்டு, தி.மு.க., இரட்டை வேடம் போடுவது ஏன்? பா.ஜ., அரசு கொண்டு வந்ததல்ல என தெரிந்தும், லோக்சபாவில் பா.ஜ.,வுக்கு எதிராக தி.மு.க., எம்.பி.,க்கள் கோஷம் போடுவது அநாகரிகம். கவர்னர், தங்களோடு ஒத்துப் போகவில்லை என்றால், உடனே கவர்னரை திரும்ப பெற வேண்டும் என கூறுவதை தி.மு.க., வழக்கமாக கொண்டுள்ளது.


latest tamil news


நீட்டை திரும்பப் பெற முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு, 12 மாநில முதல்வர்கள் ஒருவர் கூட பதில் எழுதவில்லை; ஆதரவும் தெரிவிக்கவில்லை. கவர்னர் அதிகாரம்சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவை ஏற்காமல் திருப்பி அனுப்ப, அரசியல் அமைப்பு சட்டப்படி கவர்னருக்கு அதிகாரம் உண்டு. அதை தான் கவர்னர் செய்து இருக்கிறார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (30)

Matram Ondre Marathathu - Chennai,இந்தியா
07-பிப்-202213:05:52 IST Report Abuse
Matram Ondre Marathathu அண்ணா என்ன இப்படி கேட்டுடீங்க.. அப்படி வேஷம் போட்டா தான் உள்ளாட்சியில் நல்லாட்சி தர முடியும். இல்லேன்னா நீங்க மறந்துருவீங்க. எப்படி எங்க அரிதாரம்... நாங்க எல்லாம் அப்பவே அப்படி.....
Rate this:
அக்னீஸ்வரன் - NOIDA ,Brahmaputra Market,இந்தியா
07-பிப்-202213:53:48 IST Report Abuse
அக்னீஸ்வரன் இது அந்த நீட் இல்லை என்பதை பலமுறை சொன்னாலும் புரிவதில்லை. அன்றைக்கு நீட் தேர்வில் தேவைப்படும் மாநிலங்களுக்கு விளக்கு இருந்தது. இன்றைக்கு இருக்கும் நீட், பள்ளி படிப்பை சீர்குலைக்கும் முறை. பள்ளி படிப்பில் ஜஸ்ட் பாஸ் செய்தால் போதும் என்று சொல்கின்றது இந்த நீட். சரி, நீட் தேர்விழாவது தரமிருக்கும் என்று பார்த்தால், வெறும் 150 மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு இடம் கொடுத்து படிப்பை பாழாக்கும் தேர்வு இது....
Rate this:
raja - Cotonou,பெனின்
07-பிப்-202217:55:55 IST Report Abuse
rajaவெறும் 150 மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு இடம் கொடுத்து படிப்பை பாழாக்கும் தேர்வு இது..." அப்புறம் எதுக்கு எதிர்கிறாய் உடன் பிறப்பே... கேவலம் 150 மதிப்பெண்ணை எடுக்கவேண்டியது தானே.. அதை கூட எடுக்க திறமை இல்லாத கட்டுமர சமசீர் அறிவாய் இருந்துவிட்டு இப்போ எதிர்கிறாயே .....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
07-பிப்-202213:04:27 IST Report Abuse
raja "ரு. முருகன் காந்தி தாக்கல் செய்த" ... காந்தி செல்வங்க....நீங்க சொன்னவர் திமுக வீசும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் பிறவி.....
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-பிப்-202212:40:29 IST Report Abuse
Matt P கலைஞ்சர் குடும்பனா அப்படி தான். இரட்டை வேடம் என்ன பத்து வேஷம் கூட போடுவார்கள். அப்படி போடலின்னா அது கூத்து (கலை)பட்டறை குடும்பம் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X