மீண்டுமொரு தீர்மானம் தேவையற்றது: முதல்வருக்கு கிருஷ்ணசாமி கடிதம்

Updated : பிப் 07, 2022 | Added : பிப் 07, 2022 | கருத்துகள் (80) | |
Advertisement
கோவை: 'நீட்' தேர்வு குறித்து சட்ட சபையில் மீண்டுமொரு தீர்மானம் தேவையற்றது' என, 'புதிய தமிழகம்' கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில், கிருஷ்ணசாமி கூறியுள்ளதாவது:கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தி, சபாநாயகருக்கே மசோதாவை

கோவை: 'நீட்' தேர்வு குறித்து சட்ட சபையில் மீண்டுமொரு தீர்மானம் தேவையற்றது' என, 'புதிய தமிழகம்' கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், கிருஷ்ணசாமி கூறியுள்ளதாவது:கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தி, சபாநாயகருக்கே மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார்.




latest tamil news


இந்நிலையில், வரும் 8ம் தேதி(நாளை) சட்டசபை சிறப்புக் கூட்டம் ஒன்றை மீண்டும் நடத்தவும், ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டதையே வலியுறுத்தி மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும்அறிவித்துள்ளீர்கள். 'நீட்' தேர்வு என்பது பார்லியில் விவாதிக்கப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிட்டது. அதிலிருந்து ஒரு மாநில அரசு விலக்கு பெறுவது என்பது இயலாத காரியம்.


இருப்பினும், உங்களுடைய அரசியல் ரீதியான அணுகுமுறைக்கு, கவர்னரையே ஆயுதமாகவும், கேடயமாகவும் பயன்படுத்தவும், அதில் தமிழக மக்களை பலிகடா ஆக்கவும் நினைப்பதில் நியாயம் இல்லை.


கடந்த மூன்று ஆண்டுகளாக கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்களும் 'நீட்' தேர்ச்சி பெற்று அதிக இடங்கள்பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும், 500க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள்இடம்பிடிக்கிறார்கள்.



latest tamil news


இளைஞர்களிடம் வேலையில்லா திண்டாட்டம், கொலை, தற்கொலை, மதமாற்ற நிகழ்வுகள் என எண்ணற்ற பிரச்னைகள் தமிழகத்தில் இருக்க, 'நீட்' தேர்வை மட்டும் வைத்து தொடர்ந்து அரசியல் செய்வது எந்தவிதத்தில் நியாயம் இல்லை. 'நீட்' தேர்வு குறித்து மீண்டுமொரு சட்டசபை தீர்மானம் தேவையற்றது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (80)

muthu - tirunelveli,இந்தியா
09-பிப்-202210:06:30 IST Report Abuse
muthu Pl don't act against assembly decisions / resolutions to prevent jail sentence by assembly
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
08-பிப்-202206:03:46 IST Report Abuse
meenakshisundaram இது மீண்டும் ஒரு முறை தீர்மானமாக இருக்காது அநேகமாக இன்னொரு ஜெராக்ஸ் கோப்பி யாத்தான் இருக்கும் ஏனென்றால் இப்போதுள்ள முதல் அமைச்சர் சட்ட வல்லுநர்களை கேட்டு இதை செய்வதாக தெரியவில்லை .ஜானதிபதி வரை சென்று மீண்டும் ஒரு முரை மறுக்கப்படும் வாய்ப்பே இருக்கு.அதுவரை கட்சி வண்டியை ஓட்டலாமே -அதற்குள் ரெண்டு நீட் தேர்வுகள் முடிந்து மேலும் தமிழா மக்களும் மாணவர்களும் நீட் தேர்வை அதிக அளவில் விரும்பும் நிலையே இருக்கு.பள்ளிகள் நடத்தும் திமுக தலைகள் நீட் கோச்சிங் வகுப்புகளை ஆரம்பிக்கும் வாய்ப்பே அதிகம்
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
08-பிப்-202200:19:02 IST Report Abuse
Barakat Ali அறிவுரை அனைவருக்கும் சொல்லக்கூடாது நல்லவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருப்பவரிடம் மட்டும் சொல்லலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X