பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நகராட்சியில், ஒன்பது இடங்களில், காணொலி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அதில், ஜோதிநகர் திறந்தவெளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், கூட்டம் காட்டுவதற்காக, தி.மு.க.,வினர் பொதுமக்களை அழைத்து வந்தனர்.
![]()
|
கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில், கரை வேட்டி கட்டிய சிலர், கூட்டத்தில் பங்கேற்றவர்களின் பெயர், மொபைல்போன் எண்களை வாங்கி, பட்டியல் தயாரித்தனர்.நிகழ்ச்சி முடிந்ததும், கிளம்பிய மக்களை பார்த்து, 'கிளம்பாதீங்க, வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு பேசுறாங்க; கேட்டுட்டு போங்க,' என மைக்கில் தெரிவித்தனர்.
வேட்பாளர்களும், வெற்றி பெற்றால், வார்டுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்போம், என, வசனம் பேசினர்.அதன்பின், பெயர் பட்டியல் சேகரித்தவர்களிடமும், அழைத்து வந்தவர்களிடம் கூறி விட்டு மக்கள் கிளம்பினர். அப்போது, கட்சியினர், 'நீங்க வீட்டுக்கு போங்க, பின்னாடியே நாங்க வீட்டுக்கே வந்து தர்றோம். இங்கே வேண்டாம்,' என கூறி வழியனுப்பினர்.
![]()
|
ஏற்பாடு செய்தவர்களும், வந்தவர்களும் இலைமறைக் காயாக பேசிக்கொண்டாலும், அதன் உள் அர்த்தத்தை புரிந்து மக்கள் சிலர் சிரித்தனர். அழைத்து வரப்பட்டவர்கள் கிளம்பி சென்றதும், நிகழ்ச்சிக்கான பொறுப்பாளர்கள், தலைக்கு 200 ரூபாய் வீதம் கணக்கு போட்டு, வீட்டுக்கே கொண்டு சென்று கொடுத்துடுங்க, என, கட்சியினரை அறிவுறுத்தியதை காண முடிந்தது.