நீட் விவகாரத்தில் பிண அரசியல் செய்யும் திமுக: அண்ணாமலை விமர்சனம்

Updated : பிப் 08, 2022 | Added : பிப் 08, 2022 | கருத்துகள் (41) | |
Advertisement
நாகர்கோவில்: நீட் தேர்வு காரணமாக திமுக.,வினர், நடத்தும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் திமுக.,வினர் பிண அரசியல் செய்வதாகவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
NEET, Annamalai, BJP, DMK, Politics, நீட், அண்ணாமலை, பாஜக, பாஜ, திமுக, பிண அரசியல்

நாகர்கோவில்: நீட் தேர்வு காரணமாக திமுக.,வினர், நடத்தும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் திமுக.,வினர் பிண அரசியல் செய்வதாகவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 615 இடங்களில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். சென்னையில் 200 வார்டுகளிலும், கோவை போன்ற மாநகராட்சியில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறோம். 100 சதவீத வெற்றி என்பதை குமரி மாவட்டத்தில் நிரூபித்து காட்டி, தமிழகத்துக்கு குமரி மாவட்டம் வழிகாட்டி என்பதை நீங்கள் மீண்டும் உணர்த்த வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை விட அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும்.


latest tamil news


குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; அவர்களை வாழ்த்துகிறேன். நீட் தேர்வு காரணமாக திமுக.,வினர், நடத்தும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் எதிர்க்கிறார்கள். இதனால் பிண அரசியல் செய்கிறார்கள். நீட் தேர்வு மூலம்தான் இருளர் சமுதாய மாணவிக்கு மருத்துவக்கல்லூரியில் அனுமதி கிடைத்துள்ளது. பிற்படுத்தப்பட்ட, பல மாணவர்களுக்கு மருத்துவர்கள் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது, எனவே நீட் தேர்வு மூலம் அனைவருக்கும் சமூக நீதி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Dindigul,இந்தியா
09-பிப்-202203:24:31 IST Report Abuse
Ram ஹலோ அண்ணாமலை, நீட் கோச்சிங் போகாமல் எத்தனை பேர் நீட்டில் தேர்ச்சி பெற்றார்கள் என்று முதலில் சொல்லவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இதே உங்க வாய்தான் தொலைக்காட்சியில் நீட் தேர்வு தமிழ் நாட்டுக்கு நல்லதல்ல என்று சொல்லுச்சு ஞாபகம் இருக்கிறதா? பிண அரசியல் செய்வது DMK/ADMK அல்ல... பிண அரசியல் செய்வது உங்க BJP கட்சிதான்
Rate this:
raja - Cotonou,பெனின்
09-பிப்-202210:38:30 IST Report Abuse
rajaஅடிச்சி உடுடா... காசா பணமா.. வெறும் பொய்தானே... கேடுகெட்ட தமிழன் நாமா சொல்லற எல்லா பொய்யையும் நம்புகிறான் ..........
Rate this:
Cancel
Ram - Dindigul,இந்தியா
09-பிப்-202203:15:54 IST Report Abuse
Ram ஹலோ அண்ணாமலை, முதலில் நீ எதாவுது ஒரு வார்டில் நின்று வென்று விட்டு அப்பறம் பேசு
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
09-பிப்-202201:03:22 IST Report Abuse
Venkatakrishnan நீட் ஏன் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு சொல்ல உனக்கு வக்கிருக்கா ஆட்டுக்குட்டி ஆபீசர்...?
Rate this:
raja - Cotonou,பெனின்
09-பிப்-202210:36:32 IST Report Abuse
rajaஇதுகூட தெரியாமல் தான் கருத்து எழுதுகிறாயா ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X