திருக்கோவிலுார், ; அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி, புலிக் கல் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி புலிக்கல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, ராஜகோபுரம் கட்டப்பட்டு நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 4ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.நேற்று முன்தினம் காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் துவங்கி, தீபாராதனை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி வேத மந்திரங்கள் முழங்க மூலஸ்தானம் மற்றும் ராஜ கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.