கிரைம் ரவுண்ட் அப்: மகன் கொடுமையால் பெற்றோர் தீக்குளிப்பு

Added : பிப் 09, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
தமிழக நிகழ்வுகள்:மகன் கொடுமையால் பெற்றோர் தீக்குளிப்புநாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம், மேலகிருஷ்ணன் புதுார், சியோன் நகரைச் சேர்ந்தவர் செல்வ ஜெயசிங், 68. இவரது மனைவி தங்கம், 65. மூத்த மகன் சதீஷ் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் இயேசு ஜெபின், 32, திருமணமாகாத நிலையில் பெற்றோருடன் வசித்தார்.நான்கு ஆண்டுகளாக செல்வ ஜெயசிங் பக்கவாதத்தால்
crime, arrest, death


தமிழக நிகழ்வுகள்:மகன் கொடுமையால் பெற்றோர் தீக்குளிப்பு


நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம், மேலகிருஷ்ணன் புதுார், சியோன் நகரைச் சேர்ந்தவர் செல்வ ஜெயசிங், 68. இவரது மனைவி தங்கம், 65. மூத்த மகன் சதீஷ் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் இயேசு ஜெபின், 32, திருமணமாகாத நிலையில் பெற்றோருடன் வசித்தார்.நான்கு ஆண்டுகளாக செல்வ ஜெயசிங் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கினார். கூலி தொழிலாளியான இயேசு ஜெபின், குடி போதையில், தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி பெற்றோரை துன்புறுத்தியும், வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியும் வந்துள்ளார்.


நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் செய்த தகராறு காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளான செல்வ ஜெயசிங், தங்கம் தம்பதியினர், மூத்த மகனிடம், 'இதற்கு மேல் உயிருடன் இருக்க விரும்பவில்லை' என, மொபைல் போனில் பேசி விட்டு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். சுசீந்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது


ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரையும், 3 படகையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.


பிப். 7ல் ராமேஸ்வரத்தில் இருந்து 620 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், வழக்கம் போல் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அங்கு 4 கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை படகில் இழுத்து வைத்து படகுடன் திரும்பினர். இதில் வலைகளை இழுக்க தாமதமான 3 படகுகளை பிடித்த இலங்கை வீரர்கள், அதில் இருந்த மீனவர்கள் 11 பேரையும் கைது செய்து காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இவர்கள் மீது யாழ்ப்பாணம் மீன்துறையினர் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதும் பிப். 22 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.டூ - வீலர் திருடிய மாணவர் கைது


சென்னை: திருவல்லிக்கேணி, எல்லீஸ் சாலையைச் சேர்ந்தவர் இளங்கோவன், 59; பூ வியாபாரி. இரு தினங்களுக்கு முன் இவரது டூ - வீலர் திருடு போனது. இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்தனர். இதில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், 22, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். சூர்யபிரகாஷ் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.'சில்மிஷ' துணி வியாபாரி சிக்கினார்


சென்னை: அயனாவரத்தைச் சேர்ந்தவர் ராஜி, 37. தெருவோரங்களில் துணி வியாபாரம் செய்யும் இவருக்கு, 11 வயதில் மகன் உள்ளார். இவரது மனைவி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், இரு நாட்களுக்கு முன் நள்ளிரவு, பக்கத்து வீட்டில் துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சுதாரித்த பெண் சத்தமிட்டதில் ராஜி தப்பினார். விசாரித்த அயனாவரம் போலீசார் நேற்று முன்தினம் ராஜியை கைது செய்தனர்.காதல் விவகாரம்: நண்பனுக்கு வெட்டு


சென்னை: கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம், 9வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 20. இவரது நண்பர் சரண் குமார். இருவரும் ஒரே பெண்ணை காதலித்துள்ளனர். இது தொடர்பாக, 6ம் தேதி இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சரண்குமார் கத்தியால் சந்தோஷ் குமாரை வெட்டி தப்பி சென்றார். கோடம்பாக்கம் போலீசார் விசாரித்து, சரண்குமாரை கைது செய்தனர்.மகன் தற்கொலை சோகத்தால் தந்தையும் அதேவழியில் இறப்பு


வேடசந்துார்: வேடசந்துார் அருகே காதலித்த பெண் கிடைக்காததால் மகன் சதீஷ்குமார் 31, கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த சோகத்தில் தந்தை துரைராஜ் 65 நேற்று அதே இடத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வெள்ளனம்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் . ஓட்டல் நடத்தி வந்தார். இவரது ஒரே மகன் சதீஷ்குமார் 31. ஒடிசா மாநிலத்தில் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். அங்குள்ள ஒரு பெண்ணை காதலித்தார். திருமணம் செய்ய விரும்பி பெண் கேட்டுள்ளார். பெண் வீட்டார் மறுத்து விட்டனர்.


விரக்தியடைந்து சொந்த ஊருக்கு வந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மகன் இறந்த துக்கம் தாளாத தந்தை துரைராஜ், நேற்று மாலை அதே அதே இடத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த ஒரே வாரத்தில் தந்தையும் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பயங்கரவாதிக்கு பரோல்


நாகர்கோவில்: எஸ்.ஐ.,வில்சன் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிக்கு பரோல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குமரிமாவட்டம் களியக்காவிளையில் அவரது வீட்டை சுற்றி பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


2020 ஜனவரி எட்டாம் தேதி இரவு கன்னியாகுமரி - கேரள எல்லையான களியக்காவிளை செக் போஸ்டில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் பல பயங்கரவாதிகள் 'உபா' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் களியக்காவிளை பி.பி.எம். ஜங்ஷனை சேர்ந்த செய்யது அலி 32.


தென்காசி உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இவரை சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்திருந்தனர்.இந்நிலையில் இவரது தந்தை பஷீர் உடல்நலக்குறைவால் இறந்தார். இவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள செய்யது அலிக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில் பலத்த பாதுகாப்புடன் களியக்காவிளை அழைத்து வரப்பட்டார்.


இவரது வீட்டை சுற்றி தமிழகம் மற்றும் கேரளா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று மாலை இங்கிருந்து புறப்பட்டு சென்னையில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.


latest tamil newsஇந்திய நிகழ்வுகள்:மகாபாரத நடிகர் மரணம்


புதுடில்லி: துார்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான 'மகாபாரதம்' தொடரில் பீமனாக நடித்து புகழ் பெற்றவர் பிரவீன் குமார் சோப்தி, 74. டில்லியில் வசித்த இவர், எல்லை பாதுகாப்பு படை வீரராக இருந்தவர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் வட்டு மற்றும் ஈட்டி எறிதலில் இரு தங்கம் உட்பட நான்கு பதக்கங்கள், காமன்வெல்த் போட்டியில் வட்டு எறிதலில் வெள்ளி பதக்கம் பெற்றவர். இந்நிலையில், மாரடைப்பால் பிரவீன் குமார்மரணம் அடைந்தார்.யானை மிதித்து சிறுமி பலி


திருச்சூர்: கேரளாவின் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் 5 வயது சிறுமி, தன் தந்தை மற்றும் உறவினருடன் நேற்று முன்தினம் பைக்கில் சென்றுள்ளார். திடீரென காட்டு யானை வழிமறித்ததால், மூவரும் உயிர் பிழைக்க ஓடியுள்ளனர். அப்போது தவறி விழுந்த சிறுமியை யானை மிதித்து கொன்றது. சிறுமியை காப்பாற்ற முயன்றதால் காயமடைந்த தந்தை உள்ளிட்ட இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.பத்திரிகையாளர் மீது தாக்குதல்


சிராங்: அசாமின் சிராங் மாவட்டம் பசுகான் நகரில், நேற்று முன்தினம் பைக்கில் 'ஹெல்மெட்' அணியாமல் சென்ற இரு போலீசாரை, பத்திரிகையாளர் ஜெயந்தா தேப்நாத் தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பி உள்ளார். ஆத்திரமடைந்த போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இந்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியதால் கடும் கண்டனம் எழுந்தது. சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அசாம் காவல்துறை, தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.பனிச்சரிவில் சிக்கி பலி 7 வீரர்கள் உடல் மீட்பு


புதுடில்லி:அருணாச்சல பிரதேசத்தில், பனிச்சரிவில் சிக்கி பலியான பாதுகாப்பு படை வீரர்கள் ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.


வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்ட மலைப் பிரதேசங்களில், தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இங்கு, 14 ஆயிரத்து 500 அடிக்கும் உயரமான இடங்களில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அங்கு ரோந்து பணியில் இருந்த ஏழு வீரர்கள் சமீபத்தில் மாயமாகினர். அவர்கள் பனிச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்பதால், மீட்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. இருப்பினும், மாயமான ஏழு வீரர்களும் பனிச்சரிவில் சிக்கி பலியானது உறுதியானது. அவர்களின் உடல்கள், அங்குள்ள ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டு உள்ளதாக உயர் அதிகாரிகள் கூறினர்.2 சிறுமியர் பலாத்காரம்; 'மதரசா' ஆசிரியர் கைது


மங்களூரு: கர்நாடகாவில் சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த 'மதரசா' ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே, குண்டட்கா கிராமத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தோர் படிக்கும் மதரசா உள்ளது. இதன் ஆசிரியர் உஸ்தாத் சிராஜுதீன் மதானி, இங்கு படிக்கும் இரண்டு சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளார். சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து, புத்துார் மகளிர் போலீசார் மதானியை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
09-பிப்-202220:19:55 IST Report Abuse
MARUTHU PANDIAR நீட் தற் கொலைகளோட கம்பேர் பண்ணாக்க இதெல்லாம் பிசுக்கோத்து, பிசாத்து .அப்படித் தானே உ.பிஸ்? அப்புடீன்னு கேக்கறாங்க.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
09-பிப்-202220:17:23 IST Report Abuse
MARUTHU PANDIAR n .....
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
09-பிப்-202217:21:56 IST Report Abuse
DVRR மகன் கொடுமையால் பெற்றோர் தீக்குளிப்பு???இதெல்லாம் இந்த கலிகாலத்தில் சர்வசகஜமான நிகழ்வாகிவிட்டது . அதே மகன் தன் குழந்தைகள் மேலேவர எல்லா உதவியும் செய்வான் அந்த மகனும் இப்படியே தாய் தந்தையை i கவனிக்கமாட்டான் . அந்த லெவெலுக்கு இப்போதைய கலாச்சாரம் கொண்டு செல்கின்றது இளைய சமுதாயத்தில். இதற்கு ஒரே காரணம் தாய் எனப்படும் பெண் தான்????ஏன்???1940-60களில் சிறு வயதில் குழந்தைகளிடம் சொல்வது என்ன???டேய் அப்பா வர்ரார்???அந்த குழந்தைகள் அமைதியாகிவிடும் படிக்கத்தொடங்கிவிடும் சாப்பிட மறுக்கும் குழந்தை சாப்பிடத்தொடங்கிவிடும். இப்போது என்ன நடக்கின்றது??அப்பா வந்தாச்சா??இன்னைக்காவது நான் சொன்னதை வாங்கிக்கொண்டு வந்தாரா இல்லை எப்போதும் போல் தானா??எப்போவும் இவர் இப்படிதான் ஒண்ணுக்கும் லாயக்கில்லை. இந்த மாதிரி புருடனை கேலி செய்தால் அந்த தந்தையை அந்த குழந்தை எங்கே மதிக்கும்????இதற்குப்பதிலாக அந்த தாயானவள் சொல்லவேண்டியது என்ன???ஒங்க அப்பா நமக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து உணவு உடை படிப்பு எல்லாம் அடக்கின்றது அவருக்கு பலவிஷயங்கள் தெரியும் ஒங்க அப்பா மாதிரியே எல்லா அப்பாக்களும் இருக்கின்றார்கள் (குடி காரன் ஸ்த்ரீ லோலன் தெருப்பொறுக்கி சம்பாதிக்காதவன் தவிர்த்து). இப்படி சொன்னால் தான் அப்பா அம்மா குடும்பம் என்றொரு ஆலமரத்தின் விழுதுகளுக்கு நன்கு புரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X