தி.மு.க., செய்தது மன்னிக்க முடியாத குற்றம்: அண்ணாமலை விளாசல்

Updated : பிப் 09, 2022 | Added : பிப் 09, 2022 | கருத்துகள் (82) | |
Advertisement
தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில்,'நீட்' தேர்வுக்கு விலக்கு கேட்கும் தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி உள்ளனர். இந்த கூட்டத்தில், கவர்னர் ரவியின் செயல்பாடுகளை, முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:'நீட் தேர்வு என்பது அரசியல் சட்டத்தின் படி உருவானது
திமுக, நீட், பாஜ, அண்ணாமலை, dmk, neet, bjp, annamalai,

தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில்,'நீட்' தேர்வுக்கு விலக்கு கேட்கும் தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி உள்ளனர். இந்த கூட்டத்தில், கவர்னர் ரவியின் செயல்பாடுகளை, முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:


'நீட் தேர்வு என்பது அரசியல் சட்டத்தின் படி உருவானது கிடையாது. இந்திய மருத்துவ கவுன்சில் உருவாக்கிய தேர்வு முறை' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே?இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் - 1956, நம் பார்லிமென்டால் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தேர்வு முறைகளை வழிவகுக்கும் உரிமையை, இச்சட்டத்தின் 33 பிரிவு தந்துள்ளது. இது எப்படி, அரசியல் சட்டத்தின்படி உருவாகாத தேர்வு என்று, முதல்வர் கூறுகிறார் என தெரியவில்லை.


'நீட் தேர்வு என்பது பலி பீடம். இளம் பிஞ்சுகளை நாம் இழந்துள்ளோம். சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைக்கும் அனுப்பியது நீட் தேர்வு' எனவும், முதல்வர் கூறியிருக்கிறாரே?தமிழகத்தை தவிர, வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழவில்லை. 2017ம் ஆண்டு முதல், தி.மு.க., நீட் தேர்வை அரசியலாக்கி வருகிறது. அதற்குத் தான் பலிகடாவாக நம் மாணவர்கள் தள்ளப்பட்டனர். இப்படியொரு மன்னிக்க முடியாத குற்றத்தை, தி.மு.க., இழைத்தது. அதை மறைக்கவே, இப்படி நாடகம் போடுகிறது.
பிற மாநிலங்களில், நீட் தேர்வை மற்ற எல்லா தேர்வுகளையும் போலவே பார்க்கின்றனர். ஆனால், தமிழகத்தில் அரசியல் சட்டப்படி சாத்தியம் இல்லாததையும், நாங்கள் செய்து காட்டுவோம் என, வாக்குறுதி அளிக்கின்றனர். தேர்தல் நேரத்தில், 'நீட் தேர்வை இல்லாமல் செய்ய, எங்களிடம் அஸ்திரம் உள்ளது; ரகசியம் உள்ளது' என்று பொய்யான பரப்புரைகளை செய்தனர். எந்த அஸ்திரமும் இல்லை.
இவர்களின் பொய் பரப்புரைகளை நம்பி, கனவுகளோடு, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், சரியான மதிப்பெண் வாங்க முடியாமல் கனவு சிதைந்து போனதும், உயிரை மாய்த்து கொள்கின்றனர்.அப்படியென்றால், இந்த உயிரிழப்புகளுக்கான காரணம் என்ன; யார் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை, மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.
நீட் தேர்வு என்பது பலிபீடம் என்று கூறும் முதல்வர் ஸ்டாலின், இதை தி.மு.க.,வின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வனிடமோ, நீட் தேர்வுக்கு இன்றளவிலும் மிக அழுத்தமாக ஆதரவு தெரிவித்து வரும் சிவகங்கை காங்., -- எம்.பி., கார்த்தி சிதம்பரத்திடமோ கேட்டிருக்கலாம்.


latest tamil news

நீட் தேர்வுக்கான விலக்கு அளிக்க வகை செய்யும் மசோதாவை, திருப்பி அனுப்ப கவர்னர் கூறிய காரணங்கள் சரியல்ல என்று, சட்டசபையில் விமர்சித்துள்ளனரே?நீட் தேர்வை ரத்து செய்தது செல்லாது என்று, உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்தது. உடனே, அதை எதிர்த்துத் தானே மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். அதை செய்வதை விட்டு விட்டு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, சட்ட மசோதாவை கவர்னருக்கு அனுப்பினால், அதை அவர் சட்டப்பூர்வமாகத் தான் அணுகுவார். உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் இப்படி செய்தது தான், அரசியல் சட்டத்துக்கு எதிரானது.
கவர்னர்,தமிழக அரசின் நீட் தேர்வுக்கான விலக்கு கோரும் மசோதா மீது, நீண்ட சட்ட ஆலோசனைகளை செய்துள்ளார். தமிழகம் மற்றும் தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து தீர்க்கமாக யோசித்து, அதற்கான தர்க்கங்களுடனேயே அவர், மசோதாவை மறுதலித்து, சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார்.
அவர் என்ன சொன்னார் என்பதை முழுமையாக வெளியிடாமல், அவர் கூறியதில் துண்டு துண்டாக சில விஷயங்களை மட்டும் கூறியுள்ளனர். அதன் மேல் நடவடிக்கையாக, மீண்டும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைப்பது என்பது, முழுமையான மோசடித்தனம்.
இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது என்று சொன்னால், கவர்னரின் முழு அறிக்கையையும் வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால், கவர்னர் கூறிய காரணங்கள் அனைத்தையும் மக்கள் ஏற்பர். அதற்காகத் தான், அதை மறைக்கின்றனர்


latest tamil news
நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அரசு குழு அமைத்தது. அவர், இது தொடர்பாக 86 ஆயிரத்து, 342 பேரிடம் பெற்ற கருத்துகளை ஆராய்ந்து, அரசுக்கு அளித்த அறிக்கையின் படி தான், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தீர்மானம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது என ஸ்டாலின் கூறியுள்ளாரே?நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையில் கூறப்பட்ட தகவல்கள் பெரும்பாலானவை யூகங்களாகவும், தி.மு.க.,வின் வசதிக்கு ஏற்ப திரிக்கப்பட்டதாகத் தான் இருந்தன. இதுபற்றி நாங்கள் பலமுறை கேள்வி எழுப்பியும், அரசு தரப்பில் பதில் இல்லை.
தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் சேர்க்கை, அவர்கள் வாங்கிய நன்கொடை தொகை பற்றி நாங்கள் கேட்ட வெள்ளை அறிக்கையை, அரசு ஏன் இன்னும் வெளியிடவில்லை;

இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 57 சதவீத மாணவர்கள், எந்த தனியார் பயிற்சி மையங்களிலும் பயிலவில்லை என்ற, உண்மை தகவல் வெளி வந்துள்ளது.
ஆனால், ஏ.கே.ராஜனின் அறிக்கையின் படி, வெறும் 1 சதவீத மாணவர்கள் மட்டுமே தனியார் மையங்களின் பயிற்சி இன்றி, தேர்ச்சி அடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இதையேதான், இப்போதைய தி.மு.க., அமைச்சர்களும், கூட்டணி கட்சியினரும் கூறியுள்ளனர். இப்படி முரண்பட்ட தரவுகள், தகவல்கள் அடிப்படையில் உருவான ஒரு அறிக்கையை, கவர்னர் ஏற்று, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால், மக்கள் நலன் என்னாகும்? முரண்பட்ட தகவல்களை கொண்ட ஏ.கே.ராஜன் அறிக்கை வாயிலாக உருவான தீர்மானத்தை, கவர்னர் ஏற்க வேண்டும் என்று தி.மு.க., நினைப்பது வேடிக்கையாக உள்ளது.


நீட் தேர்வுக்கு முன், 90 சதவீதம் அளவுக்கு, மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு, மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது என, ஒரு வாதத்தை முன்வைக்கின்றனரே?கடந்த 2006ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், 200 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இருந்தன. தற்போது 1,300 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இவற்றில் பல பள்ளிகள், தி.மு.க.,வின் வாரிசுகள் நடத்தி வருபவை. மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள், அதிக தேர்ச்சி பெற வேண்டும் என்றால், இத்தனை சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்தது யார், ஏன்? அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்க வேண்டுமே தவிர, மாநில பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் என பாகுபாடு காட்ட தேவையில்லை.
நீட் விலக்கு சட்டம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதன் வாயிலாக, மாநில உரிமை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கொள்கை முடிவை, நியமன பதவியில் அமர்ந்திருக்கும் கவர்னர் மதிக்காதது, மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என விமர்சித்துள்ளனரே?அரசியல் சட்டத்தின், 254 பிரிவின்படி, பொது பட்டியலில் உள்ள சட்டத்தில், ஏதேனும் விவாதம் இருப்பின், மத்திய அரசின் நிலைப்பாடே இறுதியானது.ஒருவேளை, மாநில அரசு நடைமுறைப் படுத்தும் ஒரு தீர்மானத்தை, ஜனாதிபதி ஏற்றால் மட்டும் தான், அந்த மாநிலத்தின் கோரிக்கையை சட்டமாக மாற்ற முடியும். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று, ஜனாதிபதி, தமிழக அரசுக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டார்.
கடந்த 2017 செப்., மாதம், இதேபோன்ற ஒரு தீர்மானத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்ற அடிப்படையில், ஜனாதிபதி நிராகரித்தார்.மீண்டும் ஒரு தீர்மானம், அதற்கு அடிப்படையாக பல ஓட்டைகள் உள்ள முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை அனுப்பி ஒப்புதல் பெற முடியும் என்று, முதல்வர் எப்படி நம்பினார் என தெரியவில்லை. இதுதான் உதயநிதி சொன்ன அந்த ரகசியமா; அது தான் உண்மையென்றால், தவறு எங்கே என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும்.


பொதுப் பட்டியலில் உள்ள பொருள் குறித்து, மாநில சட்டசபையில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை காக்க, சட்டப்பிரிவு உள்ளதாக பேசியுள்ளனரே?முந்தைய கேள்விக்கு கூறிய பதில், இந்த கேள்விக்கும் பொருந்தும். கவர்னர், அமைச்சரவைக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும்; மாறாக நடந்து கொள்ள கூடாது என்றும் சட்ட சபையில் பேசியுள்ளனரே?அவர்கள் பேசியதில் மாற்று கருத்தில்லை.
ஆனால், இங்கு இருக்கும் அமைச்சரவை, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகவும், அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் செயல்படுவதால், அதை சுட்டிக் காட்டுவது கவர்னரின் கடமை மற்றும் உரிமை.


'நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதன் வாயிலாக இந்தியாவுக்கே ஒளிவிளக்கை ஏற்றி வைக்கிறோம்' என, தன் பேச்சின் இறுதியில் ஸ்டாலின் கூறியுள்ளாரே?நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் விவகாரத்தில், 12 மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு குறைந்தபட்சம் ஒருவராவது பதில் கூறினாரா; பக்கத்தில் இருக்கும் கேரள மாநில முதல்வரிடம், நீட் தேர்வு எப்போது நடந்தது என்று கேளுங்கள்; அது கூட அவருக்கு நினைவு இருக்காது. ஏனென்றால், உங்களை போல் தனியார் கல்லுாரிகளுக்கு சாதகமில்லாத இந்த தேர்வை, அரசியலாக்கி, அதில் ஆதாயம் தேட அவர்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம். அதுமட்டுமல்ல, இப்படியொரு மன நிலையில் தான் மற்ற மாநில முதல்வர்களும் இருக்கலாம்.


தமிழக சட்டசபை தீர்மானத்தை, கவர்னர் நிராகரிக்க முடியும் என்றால், இந்திய மாநிலங்களின் நிலை என்னாகும் என, முதல்வர் ஸ்டாலின் அச்சம் தெரிவித்திருக்கிறாரே?


பொய்யான பரப்புரையை செய்து, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பலிபீடத்துக்கு அனுப்பிய ஸ்டாலின், மற்ற மாநிலங்களின் மாணவர்களின் நலனையும் வீணாக்கும் எண்ணத்தில் இப்படி பேசுகிறாரோ என்பது புரியவில்லை. ஆடு நனைகிறது என ஓநாய் கவலைப்பட்ட கதை தான் நினைவுக்கு வருகிறது.வார்த்தைக்கு வார்த்தை தமிழக மக்கள் நலன் தான் முக்கியம் என்று கூறி, அதற்கு எதிராக தொடர்ந்து நடக்கும் முதல்வர் ஸ்டாலின், இனியாவது தமிழகத்தின் உண்மையான நலனுக்கு பாடுபட வேண்டும். அதற்காக, இறைவனிடம் வேண்டி கொள்ளத் தான் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
09-பிப்-202216:22:13 IST Report Abuse
Ravi Chandran கர்நாடகாவில் இருந்து அனுப்பப்படட அசிங்கமான ஆட்டு புழுக்கை மே மே மே
Rate this:
raja - Cotonou,பெனின்
09-பிப்-202217:03:28 IST Report Abuse
raja...........
Rate this:
R Ravikumar - chennai ,இந்தியா
09-பிப்-202217:54:30 IST Report Abuse
R Ravikumarஉயர்ந்தது எல்லாம் தாழும் . தாழ்ந்தது உயரும் . பார்த்து கொன்டே இருங்க தம்பி ....
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
09-பிப்-202218:50:58 IST Report Abuse
RaajaRaja Cholanஒருவனை ஆடு என்று சொல்லும் உன் தகுதி பல் இளிக்குது...
Rate this:
raja - Cotonou,பெனின்
10-பிப்-202211:08:25 IST Report Abuse
raja........
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
09-பிப்-202216:21:49 IST Report Abuse
MARUTHU PANDIAR பிஞ்சுகள் உயிரை மாய்த்துக் கொண்டது "நாங்கள் நிட்டை முதல் கையெழுத்து போட்டு நீக்குவோம்"னு புருடா விட்டதால் தான்===அது சரி. குடிகார அப்பா கொடுமையால் மகள் தற் கொலை....குடித்து விட்டு மகளை பலாத்காரம் குடிகார தந்தை போக்சோவில் கைது, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை குடிகார கணவன் கொடுமையால் -இப்படிப்பட்ட பத்திரிகை செய்திகள் கிட்டத்தட்ட அன்றாடம் கண்ணில் படுகிறதே? டாஸ்மாக்குக்கு எதிரா சட்ட சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வர -இருக்கா நீட் தற்கொலையை விட டாஸ்மாக் தற்கொலை எங்கையோ எகிறுதே அப்படீன்னு பேசிக்கறாங்க.
Rate this:
Cancel
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
09-பிப்-202216:20:04 IST Report Abuse
Ravi Chandran . …..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X