ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன், ஸ்ரீபெரும்புதுார் நகர காங்., நிர்வாகி. ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி 1வது வார்டில் போட்டியிட, பூபாலன் விருப்ப மனு தாக்கல் செய்தார்.தி.மு.க., கூட்டணியில் காங்.,குக்கு மூன்று இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதால், பூபாலனுக்கு 'சீட்' கிடைக்கவில்லை.
![]()
|
இதனால் பூபாலன், தன் மனைவி தனலட்சுமியை சுயேச்சையாக போட்டியிட வைத்துள்ளார். தனலட்சுமிக்கு தண்ணீர் குழாய் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மனைவிக்கு ஓட்டளிக்க வேண்டும் என, கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டியதாக கூறி ஸ்ரீபெரும்புதுார் போலீசார், பூபாலனை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் காங்., நிர்வாகிகள் கூறியதாவது:பூபாலனுக்கு, மக்கள் செல்வாக்கு உள்ளது. 2010ல் ஸ்ரீபெரும்புதுார் வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.இந்த தேர்தலில் சுயேச்டையாக போட்டியிட்டு, அவர் வெற்றி பெற்று விடுவார் என்பதால், அவரது பெயரை கெடுக்கும் விதமாக தி.மு.க.,வினர் சதிசெய்து, பூபாலனை சிறையில் அடைத்துஉள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()
|
ஸ்ரீபெரும்புதுாரில் காங்., - -தி.மு.க.,இடையே பனிப்போர் நிலவுகிறது. காங்., ஏழு 'சீட்' கேட்டும், தி.மு.க., தரப்பில் மூன்று சீட் தான் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இதனால், காங்.,கை சேர்ந்த சிலர், சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர்.