பிரதமர் மோடி மீது எனக்கு பயமில்லை: ராகுல்| Dinamalar

பிரதமர் மோடி மீது எனக்கு பயமில்லை: ராகுல்

Updated : பிப் 11, 2022 | Added : பிப் 10, 2022 | கருத்துகள் (42) | |
மங்லார்: பிரதமர் மோடி மீதோ அல்லது அவரது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகள் மீதோ பயம் இல்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ.,வும், காங்கிரசும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கடும் முயற்சி மேற்கொண்டு
UttarkhandElections2022, Congress, Rahul, PMModi, Fear, பிரதமர் மோடி, பயமில்லை, ராகுல்

மங்லார்: பிரதமர் மோடி மீதோ அல்லது அவரது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகள் மீதோ பயம் இல்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ.,வும், காங்கிரசும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்தரகண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்லாரில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் காங்., எம்.பி., ராகுல் பங்கேற்றார்.



latest tamil news

அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் அவர் சொல்வதைக் கேட்கவில்லை என்று கூறியுள்ளார். அது சரிதான். எனக்கு பிரதமர் மோடி மீதோ அல்லது அவரது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகள் மீதோ பயம் இல்லை. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மற்றும் காங்கிரசால்தான் திரும்பப் பெறப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X