புதுடில்லி: மணிப்பூர் சட்டசபை தேர்தல் தேதியை மாற்றி அமைத்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் சட்டசபைக்கு முதற்கட்ட ஓட்டுப்பதிவு பிப்.,27 மற்றும் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு மார்ச் 3 என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
![]()
|
இந்நிலையில் தேர்தல் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், மணிப்பூர் சட்டசபைக்கு முதற்கட்ட ஓட்டுப்பதிவு பிப்.,28-ம் தேதியும், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு மார்ச் 5ம் தேதியும் நடைபெறும். இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement