'ஆடி' கார் மிரட்டல்: எஸ்.ஐ., மீது வழக்கு

Added : பிப் 11, 2022 | |
Advertisement
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே மடிச்சலையை சேர்ந்தவர் பிரவின், 30. இவரது மனைவி அக் ஷயா, 23. இவர்களுக்கு 2019ல் திருமணமாகி, தற்போது குழந்தை உள்ளது. திருமணத்தின் போது 70 சவரன் நகை, வீட்டு உபயோக பொருட்களை பெண் வீட்டார் வழங்கினர். கூடுதலாக 'ஆடி' கார், ௧௦ சவரன் நகை கேட்டு அக் ஷயாவை கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.இது குறித்து, அக் ஷயா போலீசில் புகார்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே மடிச்சலையை சேர்ந்தவர் பிரவின், 30. இவரது மனைவி அக் ஷயா, 23. இவர்களுக்கு 2019ல் திருமணமாகி, தற்போது குழந்தை உள்ளது.


திருமணத்தின் போது 70 சவரன் நகை, வீட்டு உபயோக பொருட்களை பெண் வீட்டார் வழங்கினர். கூடுதலாக 'ஆடி' கார், ௧௦ சவரன் நகை கேட்டு அக் ஷயாவை கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.இது குறித்து, அக் ஷயா போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இதைத் தொடர்ந்து, கணவர் பிரவீன், மாமனார் முரளிதரன், உறவினர்கள் உட்பட ஆறு பேர் மீது, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முரளிதரன், ராமநாதபுரத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X