செம்மரம் வெட்டும் கும்பலை, ஏற்றிச் சென்ற தமிழக அரசு பஸ் பறிமுதல்

Added : பிப் 11, 2022 | |
Advertisement
வேலுார்:செம்மரம் வெட்ட செல்லும் கும்பலை, ஏற்றிச் சென்ற தமிழக அரசு பஸ், திருப்பதி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.ஆந்திர மாநிலம், திருப்பதி போலீசார் நேற்று காலை, 11:00 மணிக்கு சந்திரகிரி புறவழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த தமிழக அரசு பஸ் ஒன்று, திருப்பத்துாரில் இருந்து வேலுார் வழியாக திருப்பதி சென்றது. பஸ்சை போலீசார்
 செம்மரம் வெட்டும் கும்பலை, ஏற்றிச் சென்ற தமிழக அரசு பஸ் பறிமுதல்

வேலுார்:செம்மரம் வெட்ட செல்லும் கும்பலை, ஏற்றிச் சென்ற தமிழக அரசு பஸ், திருப்பதி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம், திருப்பதி போலீசார் நேற்று காலை, 11:00 மணிக்கு சந்திரகிரி புறவழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த தமிழக அரசு பஸ் ஒன்று, திருப்பத்துாரில் இருந்து வேலுார் வழியாக திருப்பதி சென்றது. பஸ்சை போலீசார் நிறுத்தினர். அப்போது பஸ்சில் இருந்த 34 பேர் இறங்கி, நாலாபுறமும் சிதறி ஓடினர்.

போலீசார், நான்கு பேரை மட்டும் பிடித்து விசாரித்தனர். அவர்கள், வேலுார் மாவட்டம், அணைக்கட்டை சேர்ந்தவர்கள் என்பதும், திருப்பதியில் செம்மரம் வெட்ட செல்வதும் தெரிந்தது.போலீசில் பிடிபடாமலிருக்க, திருமணத்திற்கு செல்வது போல உடை அணிந்து, வேலுாரில் இருந்து திருப்பதிக்கு பஸ்சில் சென்றதும், போலீசாரை பார்த்ததும் பலர் தப்பியதும் தெரிந்தது.
திருப்பதி போலீசார், தமிழக அரசு பஸ்சை பறிமுதல் செய்தனர். பஸ் கண்டக்டர் ரகுபதி, டிரைவர் அசோகன் மற்றும் பிடிபட்ட நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X