சிறுமியை சீரழித்த காவலர் கைது

Added : பிப் 11, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை:சிறுமிக்கு திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கி, தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த போலீஸ்காரரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.சென்னை, மாதவரம் காவல் நிலையத்தில், போலீஸ்காரராக பணிபுரிபவர் மகேஷ், 27. இவர், 2020ல் சமூக வலைதளம் வாயிலாக, சென்னையைச் சேர்ந்த, 16 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்தார். சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, இரண்டு முறை கர்ப்பமாக்கி, கட்டாய
 சிறுமியை சீரழித்த காவலர் கைது

சென்னை:சிறுமிக்கு திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கி, தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த போலீஸ்காரரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மாதவரம் காவல் நிலையத்தில், போலீஸ்காரராக பணிபுரிபவர் மகேஷ், 27. இவர், 2020ல் சமூக வலைதளம் வாயிலாக, சென்னையைச் சேர்ந்த, 16 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்தார். சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, இரண்டு முறை கர்ப்பமாக்கி, கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார்.


அதன்பின், சிறுமியுடனான தொடர்பை துண்டித்தார்.இதனால், மனவேதனை அடைந்த சிறுமி, தீக்குளித்து தற்கொலை செய்தார். அதற்கு முன், போலீஸ்காரர் மகேஷ், தன் வாழ்வை சீரழித்தது பற்றி, 'ஸ்மார்ட் போனில்' வீடியோ பதிவு செய்து, அதையே தன் வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளுமாறு கூறி இருந்தார்.


இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர், எம்.கே.பி., நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் முறையாக விசாரிக்காமல், தற்கொலை என, வழக்குப் பதிந்துள்ளனர். இதனால், சிறுமியின் பெற்றோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட்டது.


விசாரணையில், சிறுமி வாக்குமூலத்தில் கூறிய அனைத்து விபரங்களும் உண்மை என, தெரிய வந்தது. இதையடுத்து, மகேஷை பிடித்து விசாரித்தனர். அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, 'போக்சோ' மற்றும் பாலியல் பலாத்காரம், கடத்தல், தற்கொலைக்கு துாண்டுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவு களின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்துஉள்ளனர்.


தற்போது, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள இவரை காவலில் எடுத்து விசாரிக்க, இன்று எழும்பூர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anumanthan Gnanasekaran - Lusaka,ஜாம்பியா
14-பிப்-202215:58:46 IST Report Abuse
Anumanthan Gnanasekaran He should be done away by encounter. Otherwise he should be rated medically and put behind the bars for entire life.
Rate this:
Cancel
shankar - Coimbatore,இந்தியா
14-பிப்-202211:59:25 IST Report Abuse
shankar முறையாக விசாரிக்காத போலீசாருக்கு என்ன தண்டணை? அதை ஏன் யாரும் கூறுவதில்லை?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
14-பிப்-202203:59:25 IST Report Abuse
meenakshisundaram உயர் நீதி மன்றம் காவல் துறையில் தொண்ணூறு சதவிகிதம் கெட்டுப்போனது என்று சொல்லும்போது இந்த போலீஸ் யையும் சேர்த்து எண்ணினாங்களான்னு தெரியலையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X