ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: மாணவர்கள் போராட்டம்

Added : பிப் 11, 2022 | |
Advertisement
புதுக்கோட்டை:திடீர் உடல்நலக் குறைவால் மாணவன் இறந்ததை அடுத்து, பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, பாப்பான்விடுதியைச் சேர்ந்த நாடிமுத்து - போதினி தம்பதியின் மகன் நிதிஷ்குமார், 9. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்த
 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: மாணவர்கள் போராட்டம்

புதுக்கோட்டை:திடீர் உடல்நலக் குறைவால் மாணவன் இறந்ததை அடுத்து, பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, பாப்பான்விடுதியைச் சேர்ந்த நாடிமுத்து - போதினி தம்பதியின் மகன் நிதிஷ்குமார், 9. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்த சிறுவன், கடந்த 8ம் தேதி பள்ளியில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, வீட்டிற்கு வந்த பின் இறந்தார்.
சாவில் சந்தேகம் இருப்பதாக சிறுவனின் பெற்றோர்,ஆலங்குடி போலீசில் புகார் அளித்தனர். சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.பள்ளியில் கவனக் குறைவாக பணியாற்றியதாக, தலைமை ஆசிரியை மகேஸ்வரி, வகுப்பாசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகியோரை'சஸ்பெண்ட்' செய்து,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி உத்தரவிட்டார்.
இந்நிலையில், மற்ற மாணவர்களின் பெற்றோர், முறையான விசாரணை இல்லாமல், ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையில், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, நிதிஷ்குமார் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X