வேகமாக குறைகிறது கொரோனா கேரளாவில் மட்டும் அதிகரிப்பு

Updated : பிப் 11, 2022 | Added : பிப் 11, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி :'நாடு முழுதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கேரளா, மிசோரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:நாட்டில் ஒட்டு மொத்தமாக கொரோனா பரவல் குறைந்து வருவது நிம்மதியளிக்கிறது. எனினும் கேரளா, மிசோரம், ஹிமாச்சல பிரதேசம்,
வேகம், குறைகிறது கொரோனா  கேரளா,அதிகரிப்பு

புதுடில்லி :'நாடு முழுதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கேரளா, மிசோரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:நாட்டில் ஒட்டு மொத்தமாக கொரோனா பரவல் குறைந்து வருவது நிம்மதியளிக்கிறது. எனினும் கேரளா, மிசோரம், ஹிமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரானா பரவல் அதிகரிப்பது கவலைஅளிக்கிறது.


latest tamil news




நாட்டில் ௧௪௧ மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்படுவது, 10சதவீதத்துக்கு அதிகமாகவும், 141 மாவட்டங்களில்,5-10 சதவீதத்துக்குள்ளும் உள்ளது.கேரளா, மஹாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் அன்றாட தொற்று பாதிப்பு 29.57 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, 'நிடி ஆயோக்' உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் நேற்று கூறுகையில், ''உள்நாட்டு தொழில்நுட்பத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்
படும் முதல் மரபணு தடுப்பூசி மீது, இறுதி கட்ட சோதனை நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-பிப்-202210:31:37 IST Report Abuse
S.Baliah Seer கேரளா எப்போதுமே தொற்று வியாதிகளுக்குப் பெயர்போன ஊர்.காரணம் ஏறி,கால்வாய்,குளிர்,மழை அடர்த்தியான மரம் செடி கொடி இவை பலவித கிருமிகளைத் தோற்றுவிக்கும் காரணிகள். கேரளாவில் கொரோனா பரிசோதனையை நிறுத்திவிட்டு வியாதி வந்தவர்களுக்கு ரத்தப்பரிசோதனையை மேற்கொள்ளவும்.
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
11-பிப்-202210:13:32 IST Report Abuse
N. Srinivasan கேரளா மாநிலத்தின் பரப்பளவு ஜனத்தொகை மற்ற மாநிலத்துடன் ஒப்பிடுகையில் தொற்றின் எண்ணிக்கை மிகவும் ஜாஸ்தி மேலும் அவர்கள் எல்லாம் மிகவும் சுத்தமானவர்கள் என்று கூறுகையில் என்ன காரணம் இவ்வளவு கூடுதலாக வருவதற்கு? மரண இன்னிக்கையும் மிகவும் ஜாஸ்தி மத்திய அரசு இதை ஆராய வேண்டும்
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
11-பிப்-202209:55:48 IST Report Abuse
Sathish ஒன்றுகூடி பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதில் எங்களை மிஞ்ச உலகத்தில் யாருமில்லை என்று சொல்வார்கள் மலையாளிகள். ஒருவரை ஒருவர் விலகி இருக்கச்சொன்னால் அவர்களுக்கு உலகமே இருண்டுபோய்விடும். எப்படியோ போகட்டும் தீவிர பரிசோதனை செய்யாமல் தமிழ்நாட்டிற்குள் விட்டுவிடாதீர்கள் அவர்களை. விட்டால் கேரளா போல இங்கேயும் பரப்பிவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X