பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு மீண்டும் கொரோனா

Added : பிப் 11, 2022 | |
Advertisement
லண்டன் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, பிரிட்டன் இளவரசர் சார்லஸ், 73, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இளவரசர் சார்லஸ், சமூக வலைத்தளத்தில் நேற்று பதிவு செய்திருப்பதாவது:காலையில் வந்த பரிசோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனதற்கு
பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு மீண்டும் கொரோனா

லண்டன் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, பிரிட்டன் இளவரசர் சார்லஸ், 73, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இளவரசர் சார்லஸ், சமூக வலைத்தளத்தில் நேற்று பதிவு செய்திருப்பதாவது:காலையில் வந்த பரிசோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இளவரசர் சார்லஸ் நேற்று முன் தினம் மாலை லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஏராளமானோரை சந்தித்துப் பேசினார். 2020ம் ஆண்டு மார்ச்சில் சார்லசுக்கு தொற்று ஏற்பட்டு குணம் அடைந்தார். தற்போது மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளதால் அரண்மனையிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X