வடபழநி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.258 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு

Updated : பிப் 11, 2022 | Added : பிப் 11, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை, மாடம்பாக்கத்தில், வடபழநி முருகன் கோவிலுக்கு சொந்தமான, 258 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 நிலங்களை அபகரித்தது தொடர்பாக, வேளச்சேரி சார் - பதிவாளர் உட்பட நான்கு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சென்னையைச் சேர்ந்தவர் பங்காருசாமி நாயுடு. இவர், 1934, 1937ல், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் தாலுகா, மாடம்பாக்கத்தில் 9.86 ஏக்கர் நிலத்தை
 வடபழநி முருகன் கோவில்,ரூ.258 கோடி, நிலம்   சார் - பதிவாளர்

சென்னை, மாடம்பாக்கத்தில், வடபழநி முருகன் கோவிலுக்கு சொந்தமான, 258 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 நிலங்களை அபகரித்தது தொடர்பாக, வேளச்சேரி சார் - பதிவாளர் உட்பட நான்கு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சென்னையைச் சேர்ந்தவர் பங்காருசாமி நாயுடு. இவர், 1934, 1937ல், காஞ்சிபுரம் மாவட்டம்,
தாம்பரம் தாலுகா, மாடம்பாக்கத்தில் 9.86 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.உற்சவ விழாlatest tamil news
தீவிர முருக பக்தரான இவர், தான் வாங்கிய நிலத்தை, வடபழநி முருகன் கோவில் தேவஸ்தானத்திற்கு 1943ல் தானமாக வழங்கினார். ஆண்டு தோறும் ஐப்பசி 9ம் நாள் நடக்கும் உற்சவத்தை மிக விமரிசையாக நடத்தி வந்தார். 'என் மறைவுக்குப்பின், தானமாக அளித்த நிலத்தின் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை வைத்து, என் வாரிசுதாரர்கள் உற்சவ விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். 'அவ்வாறு முடியாத பட்சத்தில், அந்த அதிகாரத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து, உற்சவத்தை நடத்த வேண்டும்' என, பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.
அதன் அடிப்படையில், அந்த நிலத்திற்கான பட்டா, வடபழநி முருகன் கோவில் தேவஸ்தானத்திற்கு மாற்றப்பட்டுஉள்ளது.

நிலத்தை பங்காருசாமி நாயுடுவின் வாரிசுதாரரான மீரா காளிதாஸ் என்பவர் பராமரித்து வருகிறார். இந்நிலையில், மாடம்பாக்கத்தில் வடபழநி முருகன் கோவிலுக்கு சொந்தமான 9.86 ஏக்கர் நிலம் உட்பட, 257 கோடி ரூபாய் மதிப்புள்ள, 14 ஏக்கர் 80 சென்ட் நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக, மர்ம நபர்கள் அபகரித்துள்ளனர்.இதுகுறித்து, பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, தாம்பரம் சார் - பதிவாளராகவும், சேலையூர் சார் - பதிவாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்த விவேகானந்தன், 56, உதவியுடன் நிலம் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது. இவர், தற்போது சென்னை வேளச்சேரி சார் - பதிவாளராக உள்ளார். இவர் மீது, பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், கோரைக்கேணி என்ற கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமியின் மகன்கள் மணி, ரமேஷ் ஆகியோர் சொத்து தகராறில் ஈடுபட்டது போல நடித்துள்ளனர்.இவர், 2017ல், மாடம்பாக்கத்தில், வடபழநி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், தன் தந்தை கந்தசாமிக்கு சொந்தமானது போல, போலி ஆவணங்கள் தயாரித்து, விவேகானந்தன் உதவியுடன் அபகரித்தது தெரிய வந்தது.


லஞ்ச ஒழிப்புஇதுபோல, ரமேஷ், மணி ஆகியோர் தந்தை உதவியுடன், 64க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், விவேகானந்தன், கந்தசாமி, இவரது மகன்கள் மணி, ரமேஷ் ஆகிய நான்கு பேர் மீது ஊழல் தடுப்புச்
சட்டம், கூட்டு சதி, மோசடி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
11-பிப்-202210:43:38 IST Report Abuse
elakkumanan ஏம்பா , ஒரு ஐநூறு வருசத்துக்குள்ள கேஸை முடிச்சுடுங்க...ஒன்னும் அவசரம் இல்ல...நாங்க, எங்க ஓட்டையெல்லாம் நல்லவங்க, கெட்டவங்க ன்னு பிரிவினைவாதமெல்லாம் பேசாம, காசு கொடுக்குற மகாராசனுக்கு ''நேர்மையா''ஒட்டு விற்போம்.அதுனால, அவசரப்படாம, அடிச்சிக்காம, மெதுவா விசாரிங்க....நம்ம திராவிட ஆட்சியில் நாங்க பார்க்காத கேசா. நடக்கட்டும்.....கர்ம வீரரை தோற்க்கடித்து உங்களுக்கு ஒட்டு போட்டிருக்கோம்னா, எங்க அறிவு எப்பேர்க்கொந்ததுன்னு தெரியணும் ல......நம்ம மீடியா தம்பிகள் துணை இருக்கு...டிவி இருக்கு...ஆட்சி இருக்கு....பெயரில்லா அடிமை கும்பல் இருக்கு...மெதுவா விசாரிங்க பா.............நாமதான் விசாரிக்கிறோம்...சி பி ஐ யா விசாரிக்குது? அப்படியே இருந்தாலும், நாம பார்க்காத சி பி ஐ யா?...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
11-பிப்-202210:11:13 IST Report Abuse
Sampath Kumar முருகன் சொத்து அதை எவனும் திருட முடியாது அப்படை செய்தல் அவன் அனுபவிப்பான்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-பிப்-202208:43:21 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அவாள் கிட்டே சிக்கிக்கிடக்கும் சில ஆயிரம் கோடி மதிப்புள்ள கபாலீஸவர்ரின் இடங்களுக்கு எப்ப விடிவு வருமோ
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
11-பிப்-202210:58:51 IST Report Abuse
Paramanஇவாள் கிட்ட சிக்கிக்கிடக்கும் பல லட்சம் கோடி மதிப்புள்ள பலநூறு ஈஸ்வரரின் இடங்களுக்கு எப்ப விடிவு வருமோ அப்போது அவற்றிற்கும் விடிவு வரும்...
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
16-பிப்-202209:30:57 IST Report Abuse
Fastrackவஃபு நிலங்களிலேயே நிறைய ஆக்கிரமிப்பு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X